2027 -ல் மறுபடியும் விவாகரத்து? நாக சைதன்யா வாழ்க்கையில் விளையாடிய ஜோதிடர்

by Rohini |
sobitha
X

sobitha

Naga chaithanya: நாக சைதன்யாவிற்கும் திருமணத்திற்கும் சரியே வராது போல. அவர் நடிகை சோபிதாவை கூடிய சீக்கிரம் இரண்டாவதாக திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் அந்த திருமணமும் 2027 ஆம் ஆண்டு விவாகரத்தில்தான் முடியும் என ஒரு ஜோதிடர் சொன்னதாக தெலுங்கு சினிமாவில் ஒரே பரபரப்பில் இருக்கிறது.

அதுவும் சோபிதாதான் தன்னுடைய இரண்டாவது மனைவி என சோசியல் மீடியாவில் அறிவித்ததில் இருந்து ஏகப்பட்ட விமர்சனங்களும் கேலிகளும் கிண்டல்களும் நாக சைதன்யாவை சுற்றி வலம் வருகின்றன. சமந்தா மற்றும் சோபிதாவின் புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா ரோல்ஸ் ராய்ஸ் கார் என்றும் சோபிதாவை மருது ஆல்டோ கார் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதையும் படிங்க: சொதப்பலான திரைக்கதை… தனியாக தாங்கி நிற்கும் சீயான் விக்ரம்… தங்கலான் எப்படி இருக்கு?…

கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தாவை காதலித்து கரம்பிடித்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடந்து சென்றனர். ஆனால் 2021ஆம் ஆண்டு முதலே இருவருக்குள்ளும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு அது பெரிய பிரச்சினையாக மாறி கடைசியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

அதன் பிறகு சமந்தா படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். விவாகரத்துக்கு பிறகுதான் பல நல்ல நல்ல படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

இதையும் படிங்க: கொஞ்சம் கூடியிருச்சு! அதுக்கு இப்படியா? ஜோதிகாவின் அடுத்த கட்ட ஃபிட்னஸ்

இந்த நிலையில் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் டேட்டிங்கில் இருக்க சமீபத்தில்தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணமும் வரும் 2027 ஆம் ஆண்டு விவாகரத்தில்தான் முடியும் என்றும் அதற்கு ஒரு பெண்தான் காரணமாக இருக்க போகிறார் என்றும் கூறியதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

nagu

nagu

அதுவும் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் ஜாதகத்தை மேலோட்டமாக கணித்து சொன்னதாக கூறப்படுகிறது. இதை பற்றி தெலுங்கு சினிமா அந்த ஜோதிடர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க; விக்ரம் அப்படி பேசுனதுல என்ன தப்பு இருக்கு? வரிந்து கட்டிக்கொண்டு வரும் பிரபலம்

மேலும் மற்றவர்களின் வாழ்க்கையில் கேட்காமலேயே புகுந்து விளையாடுவது மிகப்பெரிய தவறு என்றும் சொல்லி வருகிறார்கள். கூடிய சீக்கிரம் அந்த ஜோதிடர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

Next Story