வைரலாகும் நாகசைதன்யா- சோபிதா திருமண பத்திரிக்கை?!... இது உண்மைதானா!... ரசிகர்கள் குழப்பம்..!

#image_title
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமண பத்திரிக்கை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது உண்மையா என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவரின் மூத்த மகன் நாகசைதன்யா. இவரும் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வலம் வருகின்றார். இவர் நடிகை சமந்தாவை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையும் படிங்க: 4 கதை சொல்லி 5-வதாக சூர்யா ஓகே செய்த கதைதான் கங்குவா!.. லீக் ஆன புதிய தகவல்!..
விவாகரத்திற்கு பிறகு இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள். நடிகை சமந்தாவுக்கு விவாகரத்துக்கு பிறகு மையோசிட்டிஸ் என்கின்ற பிரச்சனை ஏற்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். நடிகர் நாகசைதன்யா படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவருக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. விரைவில் இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டு வருகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற ஏஎன்ஆர் விருது வழங்கும் விழாவிலும் இருவரும் கலந்து கொண்டார்கள். மேலும் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இவர்களின் திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது இணையதள பக்கத்தில் டிசம்பர் 4-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது.
திருமண பத்திரிக்கை மற்றும் பரிசு பொருளுடன் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கின்றன. திருமண தேதி டிசம்பர் 4, 2024 எனவும், ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண பத்திரிகையுடன் ஒரு பரிசு கூடையும் வழங்கப்பட்டுள்ளது. உணவு பொட்டலங்கள், ஆடைகள், பூக்கள் போன்ற பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இது உண்மையாகவே நாகசைதன்யா குடும்பத்தினரால் அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கையா? அல்லது ரசிகர்களாக இப்படி ஒரு பத்திரிக்கையை தயார் செய்து சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதையும் படிங்க: அப்போ தளபதி, இப்போ திடீர் தளபதியா..? ரஜினியை விடாமல் துரத்தும் ப்ளூசட்ட மாறன்
கடந்த மாதம் சோபிதாவுக்கு உறவினர்கள் முன்னிலையில் மஞ்சள் சடங்கு நடைபெற்றது. இதற்கான புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர்களின் திருமண பத்திரிக்கை புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இது உண்மைதானா? இல்லை பொய்யா? என்பதை நாகசைதன்யா குடும்பத்தினர் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.