More
Categories: Cinema News latest news

இத்தனை ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரா நாகார்ஜூன்?!.. மனுஷன் சைலண்டா இருக்காரே!…

தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் நாகார்ஜூன். தெலுங்கில் பிரபல நடிகராக இருந்த நாகேஸ்வர ராவின் மகன் இவர். தெலுங்கில் தேவதாஸாக நடித்து பிரபலமானவர்தான் நாகேஸ்வர ராவ். 70, 80 களில் தெலுங்கில் முன்னணி நடிகாராக இருந்தவர். அவரின் ஐந்தாவது மகன்தான் நாகார்ஜூன்.

கல்லூரி படிப்புக்குபின் நடிகராக மாறினார். சில படங்களில் நடித்தாலும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சிவா என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் உதயம் என்கிற பெயரில் வெளியானது. இப்படம் மூலம்தான் நாகார்ஜூன் இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். மணிரத்னம் இயக்கத்தில் ‘இதயத்தை திருடாதே’ படத்திலும் நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து பெரிய ஹீரோவாக மாறினார். இதயத்தை திருடாதே படத்திற்கு பின் நாகார்ஜுனாவின் பல தெலுங்கு தமிழ் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. நேரடி தமிழ் படமான ரட்சகன் படத்திலும் நடித்திருந்தார். கார்த்தியுடன் தோழா படத்திலும் அவர் அற்புதமான வேடத்தில் நடித்திருந்தார்.

ஏற்கனவே திருமணமாகியிருந்தாலும் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகர் நாக சைத்தன்யா. சமந்தாவை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்தவர் இவர். அமலாவுக்கு பிரிந்தவர் அகில். இவரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது தவிர பல தொழில்களில் நாகார்ஜுனா குடும்பம் ஈடுபட்டுள்ளது. ஆந்திராவில் அன்னப்பூரணா எனும் ஸ்டுடியோ உள்ளிட்ட பல தொழில்கள் இவர்களுக்கு இருக்கிறது. நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு ரூ.3200 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால், நாகார்ஜூனா மிகவும் எளிமையானவர். எல்லோரிடமும் நன்றாக பழகுவார். தன்னை பெரிய பணக்காரராக எங்கும் காட்டிக்கொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 62 வயது ஆகிவிட்டாலும் மிகவும் இளமையான தோற்றத்தில் மற்றவர்களை பொறாமைபட வைக்கும் நடிகராவும் நாகார்ஜுனா இருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகையுடன் நெருக்கமான காட்சி! எம்ஜிஆரை தள்ளிவிட்டு நடிகையை இழுத்துச் சென்ற ஆசாமி – இப்படியெல்லாம் நடந்துருக்கா?

Published by
சிவா

Recent Posts