கூலி படத்தில் பெத்த கோடியில் புக் செய்யப்பட்டாரா நாகர்ஜூனா… வெவரம்தான்!..
Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நாகர்ஜூனா சைமன் வேடத்தில் வாங்கிய சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் கூலி. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் பரபரப்பாக இயங்கிவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தின் ஷூட்டிக் விசாகபட்டினத்தில் நடப்பதால் விறுவிறுப்பான அப்டேட்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: ஒரு கோடி தேடி வந்தும் உதறித் தள்ளிய அஜித்… ரசிகர்கள் மேல் எவ்வளவு அன்பு?!
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த கூட்டணியின் மூன்றாவது முறையாக இணைவதால் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் லோகேஷின் வழக்கமான பாணியில் இல்லாமல் இப்படம் வித்தியாசமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படக்குழு குறித்து தினசரி அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. முதலில் ஷாபின் ஷபீர் தயாள் கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வாண்டட் ஆக வலையில் சிக்கிய வெங்கட் பிரபு… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
இவரை தொடர்ந்து, சைமன் கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று பிரீத்தி கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த கேரக்டர் அறிவிப்பு யாருடையதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் இன்னும் சில சூப்பர்ஸ்டார் நடிகர்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், சைமனாக நடிக்கும் நாகர்ஜூனாவுக்கு சம்பளம் மட்டுமே 25 கோடி வரை பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.