மகனின் 2-வது திருமணம்!.. எமோஷனலாக பதிவிட்ட நாகார்ஜுனா.. என்ன சொல்லிருக்காரு பாருங்க ..!

Published on: December 5, 2024
nagachaitanya
---Advertisement---

மகனின் 2-வது திருமணம் குறித்து நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவானது வைரலாகி வருகின்றது.

நாகார்ஜுனா மகன்:

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவரின் முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்து வருகின்றார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி… ரோகிணி மீது வலுக்கும் சந்தேகம்… செந்தில் எடுத்த திடீர் முடிவு!..

நாக சைதன்யா முதல் திருமணம்:

நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு இருவரும் பரஸ்பர சம்பதத்துடன் விவாகரத்து பெற்று இருந்தனர். விவாகரத்திற்கு பிறகு இருவரும் தங்களது படங்களில் தொடர்ந்து நடித்து வந்தனர்.

chitanya marriage
chitanya marriage

சோபிதாவுடன் காதல்:

சமந்தாவுடன் விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக சமூக வலைதள பக்கங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டாவது திருமணம்:

நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இரவு 8.30 மணிக்கு நடைபெற்று முடிந்தது. பாரம்பரிய முறைப்படி பாரம்பரிய உடையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாகார்ஜுனா பதிவு:

தனது மகனின் 2-வது திருமணம் குறித்து நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘தங்களது இனிமையான இல்லற வாழ்வை தொடங்கும் நாக சைதன்யா மற்றும் சோபிதாவை  பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. என் அன்பு மகன் சாய்க்கு வாழ்த்துக்கள்.

chitanya marriage
chitanya marriage

சோபிதா நீ ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகளை கொண்டு வந்தாய். உனக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அக்கினேனியின் நூற்றாண்டு விழாவை கொண்ட நிறுவப்பட்ட சிலைக்கு முன்பு உங்கள் திருமணம் நடப்பதை பார்க்கும்போது நீங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று தோன்றுகின்றது. உங்களது இல்லற வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அக்கினேனியின் வாழ்த்தும் ஆசீர்வாதமும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க: Pushpa2 Review: வேறலெவல் சம்பவம் பண்ணிய அல்லு அர்ஜூன்!.. புஷ்பா 2 டிவிட்டர் விமர்சனம்!…

இன்று உங்களை நோக்கி வரும் எண்ணற்ற ஆசிர்வாதங்கள் அனைத்திற்கும் நான் மனதார நன்றி கூறுகிறேன்’ என்று பதிவிட்டு இருக்கின்றார். மேலும் நடிகர் நாக சைதன்யாவின் திருமணத்திற்கு தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.