யாராலும் செய்ய முடியாத அசாத்திய செயலை அசால்ட்டாக செய்து காட்டிய நாகேஷ்… வேற லெவல் !!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த நாகேஷ், நகைச்சுவை கதாப்பாத்திரம் மட்டுமல்லாது வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் ஆகிய பல கதாப்பாத்திரங்களிலும் பொருந்தக்கூடிய பன்முக நடிகராக வலம் வந்தார். குறிப்பாக தனது தனித்துவமான நடிப்பின் மூலமும் உடல் மொழியின் மூலமும் மக்களின் மனதில் தனியாக ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார் நாகேஷ்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நாகேஷ். மேலும் ஜெயசங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
பாலச்சந்தரின் மிக நெருங்கிய நண்பராக திகழ்ந்து வந்த நாகேஷ், அவர் இயக்கிய “நீர்க்குமிழி”, “எதிர்நீச்சல்” போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் பாலச்சந்தர் திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து வந்தார் நாகேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் சிறு விரிசல் ஏற்பட்டது. எனினும் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்தனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நாகேஷை தான் சந்தித்தது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது சித்ரா லட்சுமணன் பத்திரிக்கையராக பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் நாகேஷை பேட்டி எடுக்கச் சென்றாராம். அந்த காலகட்டத்தில் நாகேஷ் ஒரு நாளுக்கு 6 திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம். அந்தளவுக்கு மிகவும் பிசியான நடிகராக நாகேஷ் திகழ்ந்தாராம்.
ஒரு பக்கம் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் திரைப்படங்களில் நடிக்கும் நாகேஷ், மற்றொரு பக்கம் ஜெயஷங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என அப்போதுள்ள இரண்டாம் வரிசை நடிகர்கள் படங்களிலும் நடிப்பாராம். நாகேஷ் நடித்தாலே நிச்சயமாக படம் ஹிட் அடிக்கும் என்ற நிலை இருந்ததால் அக்காலகட்டத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களிலும் நாகேஷ் நடிப்பாராம்.
இதையும் படிங்க: அனுதாப ஓட்டுகளை வளைத்துப்போட நினைத்த டி.ராஜேந்தர்… பங்கமாய் கலாய்த்து தள்ளிய கே.எஸ்.ரவிக்குமார்…
மேலும் அவர் ஒரு படப்பிடிப்புத் தளத்திற்கு போனால் இரண்டே நிமிடங்களில் தன்னை தயார் செய்துகொண்டு வந்து நடித்துவிட்டு, அப்படியே வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்குச் சென்று அந்த படத்திலும் நடிப்பாராம். இவ்வாறு நாகேஷ் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நடிகராக திகழ்ந்தாராம்.