உன்னை விட எம்.ஜி.ஆர் தான் முக்கியம்.. பாலசந்தரை பகைத்து கொண்ட நாகேஷ்....
கே.பாலசந்தருக்கும், நாகேஷிற்கும் மிக நெருங்கிய நட்பு இருந்தது. ஆனால், முக்கியமான பிரச்சனையால் அந்த நட்பில் விழுந்த விரிசல் வெகு வருடம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. நாடகம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த நாகேஷும், அவர் நண்பரான கே.பாலசந்தரும் பல படங்களில் இணைந்து பணியாற்றினர். தனது படங்களில் நாகேஷிற்கு முக்கியமான வேடங்களை கே.பி கொடுப்பார். அதை நாகேஷும் மெருக்கேற்று நடித்து விடுவார். அந்த நேரம், நாகேஷ் அதிக வாய்ப்புகள் குவிந்தன.
அதனால், அவரின் கால்ஷூட் மட்டும் பல மாதங்கள் முன்னரே கே.பி தரப்பில் பெற்று விடப்படும். ‘வெள்ளி விழா’ திரைப்படத்தில் தான் இருவருக்கும் பெரிய அளவிலான கசப்பு உருவானது. அதில் நாகேஷிற்கு ஒரு அரசியல்வாதி வேடம். அன்று முக்கிய காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற வேண்டும். மொத்த குழுவும் நாகேஷின் வருகைக்காக காத்து கொண்டிருந்தது. அவரை அழைக்க போன புரொடக்ஷன் மேனேஜர் தனியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார்.
அவரை அழைத்த பாலசந்தர், நாகேஷ் எங்கே? என்றார். அதற்கு அந்த மேனேஜர், அவர் வர மாட்டார் சார். அவர் எம்.ஜி.ஆர் பட ஷுட்டிங்கிற்கு போய் விட்டார் எனக் கூறியிருக்கிறார். இதில் கடுப்பான கே.பி கத்த தொடங்கினாராம். இன்று நம்ம படத் தேதி தானே அங்கு எப்படி அவன் போக முடியும் என ஏகத்துக்கும் வசைப்பாட துவங்கினார். இதில் மேலும் பிரச்சனை பூதாகரமானது மேனேஜரின் கடைசி வரியில்.
இதையும் படிங்க: படப்பிடிப்பிற்கு லேட்டாக வந்த சிவாஜி… “இதான் கேப்”… புகுந்து விளையாடி ஸ்கோர் செய்த நாகேஷ்…
அதாவது, நான் அவரை கூப்பிட போனேன். ஆனால் அவரோ இவர் யார் தெரியுமாடா. எம்.ஜி.ஆர் படத்தோட டைரக்டர். இப்ப சொல்லு. நான் யார் ஷுட்டிங்குக்கு போவேன்? எனக் கூறிவிட்டு காரில் சென்று விட்டார் என்பதாகும். எதோ கால்ஷூட் குளறுபடி என்றால் நாகரீகமாக சொல்லி இருக்கலாமே அது என்ன அதீமேதாவிதனம் என கடுப்பானார்.
உடனே படக்குழுவிற்கு விடுப்பு கொடுத்தார். அவரின் உதவியாளர்களை அழைத்தார். இன்றுடன் எனக்கும் நாகேஷிற்கு ஒன்றும் இல்லை. இந்த படத்திலும் அவன் இல்லை. அவருக்கு பதில் இனி தேங்காய் சீனிவாசன் நடிக்க வேண்டும். அதுவும் நாளை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க வேண்டும் எனக் கறாராக கூறிவிட்டாராம். அதை தொடர்ந்து அடுத்த நாள் நாகேஷ் வேடத்தில் தேங்காய் சீனிவாசன் நடிக்க துவங்கினார்.
இதை தொடர்ந்து, நாகேஷ் படப்பிடிப்பு தளத்திற்கு கால் செய்து என்னப்பா இன்னைக்கு ஷூட்டிங் இருக்கா? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். அங்கிருந்த உதவியார் எல்லா தகவலையும் கூறினாராம். நாகேஷிற்கு அப்போதே இனி பாலசந்தர் நட்பு தனக்கு இல்லை என்பது புரிந்ததாம். இருவரும் சமாதானம் பேசவில்லை. தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளும் நின்றது.
ஆனால், இவர்கள் நண்பர்கள் இணைந்து பலதரப்பட்ட சமாதானங்களை செய்தனர். இதை தொடர்ந்தே, இருவரும் மீண்டும் சினிமாவில் இணைந்தனர். அப்படம் தான் அபூர்வ ராகங்கள். ஆனால் நட்பு சரியானதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.