எம்ஜிஆரின் கையால விருதையும் வாங்கிட்டு யாரென்று கேட்ட நாகேஷ்!..கேள்விப்படாத செய்தியா இருக்கே?..

by Rohini |
mgr_main_cine
X

தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர்கள் நடிகர் சந்திரபாபுவும் நடிகர் நாகேஷும் தான். அதில் நடிகர் நாகேஷ் நகைச்சுவையில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்திருந்தார். இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு தன் ஆதிக்கத்தை பெற்றிருந்தார் நாகேஷ்.

mgr1_cine

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் நாகேஷ். அந்த சமயங்களில் எம்ஜிஆரை பற்றி நாகேஷ் சரிவர அறிந்திருக்கவில்லையாம். சொல்லப்போனால் பார்த்ததும் இல்லையாம். இதை பற்றி இயக்குனர் சித்ரா லட்சுமணன் கூறிய போது இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் கூறினார்.

இதையும் படிங்க : கிட்ட யாரும் நெருங்க கூடாது!..ஜெயலலிதாவுக்கு கை கொடுத்தவரை பந்தாடிய எம்ஜிஆர்!..

mgr2_cine

என்னவெனில் ஒரு நாடகத்தில் நாகேஷின் வசனம் ஒரு மருத்துவரிடம் ‘எனக்கு வயிற்று வலி’ என்று சொல்லிக் கொண்டே அறைக்கு செல்லவேண்டும். இதில் நடிக்கும் போது டாக்டர்? என கத்திக் கொண்டே உள்ளே போனாராம் நாகேஷ். கூடவே வலியால் எப்படி துடிப்போமோ அப்படி துடித்து நடித்து கொண்டிருந்த நாகேஷின் கையில் இருந்த சீட்டை வாங்குவதற்குள் அந்த டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் பட்ட பாடு இருக்கே? இந்த சீனை நாடகத்தை இயக்கியவர் கூட எதிர்பார்க்கவில்லையாம்.

அரங்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் கொல் என சிரிக்க முன்வரிசையில் இருந்த நல்ல நிறம் கொண்ட ஒரு மனிதரும் விழுந்து விழுந்து சிரித்தாராம். நாடகம் முடிந்ததும் அந்த நிறம் கொண்ட மனிதர் தான் விருதை வழங்க வந்தாராம். நாடகத்தில் நாகேஷின் நடிப்பை பாராட்டி அவருக்கு தான் கோப்பையை வழங்கினாராம் அந்த மனிதர். கோப்பையை வாங்கிக் கொண்டு உள்ளே போன நாகேஷ் இயக்குனரிடம் ‘ஆமாம் எனக்கு கோப்பை வழங்கினாரே அவர் யார் என்று கேட்க?’ இவரை தெரியாமல் எப்படி இருக்க என்று ஆச்சரியப்பட்டு இவர் தான் எம்ஜிஆர் என்று சொன்னாராம் அந்த இயக்குனர். அதன் பின் நாகேஷ் இல்லாத எம்ஜிஆர் படங்களை நாம் பார்த்திருக்கிறோமா? இல்லை.

Next Story