ஷூட்டிங்கில் சாப்பாடு போட காரணமே நாகேஷ் தானாம்... மெய்யப்ப செட்டியாரையே கதறவிட்ட பின்னணி...
சினிமா திரையுலகில் சாப்பாடு போடும் வழக்கத்தினை நாகேஷால் தான் மெய்யப்ப செட்டியார் துவங்கினார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது..
துணை நடிகராக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நாகேஷ். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இதை தொடர்ந்தே நாகேஷ் என்னும் கலைஞரை பலரும் அறிந்தனர்.
அப்போதெல்லாம் சினிமாவில் மதிய சாப்பாட்டை நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் வெளியில் சென்று தான் சாப்பிடுவார்கள். அதைப்போல நாகேஷும் வெளியில் சாப்பிட்டு விடுவார். ஆனால், எத்தனை திறமை இருந்தாலும் நாகேஷிடம் இருந்த மிகப்பெரிய கெட்ட பழக்கம். ஒரு நாளைக்கு 100 சீகரெட் வரை பிடிக்கும் பழக்கம் இருந்ததாம். இதனால் அவருக்கு தினமும் ஷூட்டிங்கில் மதியம் சாப்பிட்டு முடித்ததும் கம்பெனி தரப்பில் இருந்து வந்துவிடும்.
தினமும் படப்பிடிப்பில் ஆன கணக்கை மெய்யப்ப செட்டியாரிடம் காட்ட வேண்டும். இதில் சிகரெட் கணக்கினை பார்த்த செட்டியார் என்ன இது? எனக் கேட்க மேனேஜர் விஷயத்தை கூறினாராம். அதான் அவருக்கு சம்பளம் கொடுக்கிறோமே? நாம் ஏன் இதையெல்லாம் வாங்கி தர வேண்டும். அவரையே வாங்கிக்க சொல் என்றாராம்.
இதை நாகேஷிடம் மேனேஜர் சொல்லி விட அவரும் சரியென விட்டுவிட்டார். அடுத்த நாள் ஷூட்டிங் தொடங்கியது. மதியம் நேரம் வர அனைவரும் லன்ச் ப்ரேக் சென்றனர். நேரம் முடிந்ததும் அனைவரும் திரும்பி விட நாகேசை மட்டும் காணவில்லை. அவரின் வீட்டிற்கு கால் பண்ணி கேட்க, அவர் மனைவி இல்லையே காலையில் ஷூட்டிங் தானே சென்றார் எனக் கூறிவிட்டாராம்.
அனைத்து இடங்களிலும் விசாரணையை முடக்கிவிட்டார் மெய்யப்ப செட்டியார். ஆனால் நாகேஷ் எங்கிருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. 1 மணி நேரம் கழித்து ஹாயாக சிகரெட் பிடித்தபடியே வந்திருக்கிறார் நாகேஷ்.
அவரிடம் கடுப்பான நாகேஷ், எங்க போனீங்க என கேட்டிருக்கிறார். என்னால் சாப்பிடாம கூட இருக்க முடியும். சிகரெட் இல்லாமல் இருக்க முடியாது. அதான் பக்கத்து கடைக்கு போனேன். என் பிராண்ட் சிகரெட் இல்லை. அதை தேடிக்கொண்டே ரொம்ப தூரம் நடந்து விட்டேன் எனக் கூறினாராம்.
இதை கேட்ட மெய்யப்பட்ட செட்டியாருக்கு கடுப்பாகி இருக்கிறது. இவர் இப்படி வெளியில் போய் ஆன செலவை விட சிகரெட் செலவு கம்மி தான். அதை வாங்கி கொடுத்து விடு என மேனஜரிடம் ஆர்டர் போட்டவர். இனி படக்குழு மொத்தமும் படப்பிடிப்பு தளத்தில் தான் சாப்பிட வேண்டும் எனவும் கூறிவிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டாராம்.