கமல் மற்றும் நாகேஷ் இருவரும் இணைந்து நடித்தாலே அது மிகப்பெரிய வெற்றி படமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி ஒரு படம் தான் மைக்கேல் மதன காமராசன். இப்படத்தின் கமலுடன் நாகேஷ் ஒரு மினி சண்டையே போட்டு இருக்கிறாராம்.
1990ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மைக்கேல் மதன காமராசன். திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு என்ற நான்கு வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். அவருடன் குஷ்பூ, நாகேஷ், ஊர்வசி, எஸ்.என்.லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
அதிலும் திரிபுர சுந்தரியாக நடித்த ஊர்வசி மற்றும் அவர் பாட்டியாக நடித்த எஸ்.என்.லட்சுமி காட்சிகள் தியேட்டரில் விசில் பறந்தனவாம். இன்றும் கூட அந்த காட்சிகளை பார்த்தால் காமெடி கலைக்கட்டும். இக்காட்சி படமாக்கும் போதே படக்குழுவே சிரிக்கும் அளவுக்கு இருந்ததாம்.
இதை பார்த்த நாகேஷ் தானே கிழவியாக நடிப்பேன். எனக்கு அந்த கதாபாத்திரத்தினை கொடுக்க வேண்டும் என கமலுடன் மல்லுக்கு நின்றாராம். கமல் மட்டும் 4 பாத்திரங்களில் நடிக்கும்போது என்னால் முடியாதா? எஸ்.என்.லட்சுமியை நீக்கிவிட்டு எனக்கு அந்தப் பாத்திரத்தை கொடுக்க வேண்டும் எனக் கூறினாராம். கமல் தான் அவர் நடித்த அவினாசி கதாபாத்திரமே உங்களுக்கு நல்ல வரவேற்பை வாங்கி கொடுக்கும் எனக் கூறி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…