நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திர அரசு வேலையை விட்டுவிட்டு வாய்ப்பு தேடியவர் நாகேஷ். 50,60களில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக அசத்தியவர். துவக்கத்தில் நாடகங்களில் நடித்துபின் சினிமாவில் நுழைந்தவர் இவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
நாகேஷ் இல்லையென்றால் வெற்றியே இல்லை என்கிற நிலை கூட உண்டானது. ஒரே நாளில் பல படங்களில் நடித்தார். நாகேஷ் வரவுக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்கர் கூட படப்பிடிப்பில் அவருக்காக காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு பிஸியான நடிகராக இருந்தார்.
இதையும் படிங்க: நீங்க என்ன பெரிய புலவரா? வாலியிடம் கடுப்பான நாகேஷ்.. அப்படி என்ன பிரச்சனை தெரியுமா?
நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திரம், வில்லன், ஹீரோ என நடிப்பில் பல பரிமாணங்களை காட்டியவர் நாகேஷ். பாலச்சந்தருக்கும் சரி, கமல்ஹாசனுக்கும் சரி எப்போதும் பிடித்த நடிகரென்றால் அது நாகேஷ் மட்டுமே. சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் உள்ளிட்ட பலபடங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாகவும் கலக்கியிருப்பார்.
நாகேஷ் மாதிரி ஒரு நடிகரை பார்க்கவே முடியாது என பல பேட்டிகளில் கமலே சொல்லியிருக்கிறார். அதேபோல், பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும்போது ‘இதுவே நாகேஷா இருந்தா எப்படி நடிப்பான் தெரியுமா?’ என அவரை ஒப்பிட்டுதான் கமலை பாலச்சந்தர் திட்டுவாராம். இதே கமலே சொல்லியிருக்கிறார்.
ஆனால், நாகேஷுக்கு ஒரு தாழ்வுபனப்பான்மை இருந்தது. சிறு வயதிலேயே அவருக்கு அம்மை வந்து முகத்தில் அந்த தழும்பு அப்படியே படிந்துவிட்டது. அதே முகத்தோடுதான் நாகேஷ் நடித்து வந்தார். அவருக்கு திருமணமாகி முதல் ஆண் குழந்தை பிறந்த செய்தி அவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: நீங்க இப்படி செய்யலாமா?!.. கடுப்பான சென்சார் போர்ட் அதிகாரி!.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நாகேஷ்…
அப்போது நாகேஷ் பாலச்சந்தரின் படப்பிடிப்பில் இருந்தார். குழந்தையை பார்க்க போகவில்லையா? என பாலச்சந்தர் கேட்டதற்கு ‘என் முகத்தை பாருங்கள்.. முகம் முழுவதும் அம்மை தழும்புகள். நான் குழந்தையை பார்த்தால் என் முகத்தை பார்த்து குழந்தை பயந்துவிடாதா?. அதனால்தன் நான் போகவில்லை’ என தழுதழுத்த குரலோடும், கண்ணீர் ததும்பும் கண்களோடும் சொன்னாராம்.
இதைக்கேட்டு கலங்கிப்போன பாலச்சந்தர் ‘நாகேஷ்.. உன் நடிப்புதான் உனக்கு அழகு.. கவலைப்படாதே.. முதலில் போய் குழந்தையை பார்த்து தூக்கி கொஞ்சிவிட்டு வா.. அப்புறம் ஷூட்டிங்க் வச்சிக்கலாம்’ என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தாராம்.
இந்த தகவலை எஸ்.பி.முத்துராமன் ஒரு திரைப்பட விழாவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்னையே எதிர்த்து பேசுறியா?.. இயக்குனரால் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்திய நாகேஷ்!..
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…