புகழ் பெற்ற நாகேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பிய பிரபலம்!.. நடக்காததால் படத்திற்கு வந்த சோதனை என்ன தெரியுமா?..

Published on: December 27, 2022
nagesh
---Advertisement---

ஆனந்த விகடனில் வாராவாரம் வெளிவந்த கதை ‘கலைமணி’. அந்த கதையை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை வந்ததில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் விகடனை வாங்க ஆரம்பித்தனர். மேலும் அந்த நாளிதழை வாங்கினாலும் கலைமணி கதையை முதலில் படித்து விட்டு தான் மீதி தகவல்களை படிக்க ஆரம்பிப்பார்களாம்.

அந்த அளவுக்கு கலைமணி என்ற கதை மிகவும் புகழ் பெற்றது. பின்னாளில் அந்த கதையே ‘தில்லானா மோகனாம்பாள்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. தஞ்சாவூரின் மண்மனம் கமழும் கதம்பம், எங்கு பார்த்தாலும் கேட்டாலும் சலங்கை ஒலி, நாதஸ்வரம் ஓசை இவைகளால் ஈர்க்கப்பட்டு வெளிவந்த கதை தான் கலைமணி.

இதையும் படிங்க :விஜய்க்கு போட்டியாக வந்த பிரபல நடிகர்… கட்டம்கட்டி தூக்க பிளான் போட்ட எஸ்.ஏ.சி… என்னப்பா சொல்றீங்க!!

மேலும் இந்த கதை வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு தான் படமாக்கப்பட்டது. ஏனெனில் இந்த கதையை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ். வாசன் கலைமணி கதையை அவர் தான் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். அதன் காரணமாகவே இத்தனை வருடங்கள் ஆகிவிட்டதாம்.

Nagesh
Nagesh

மேலும் இந்த கதையில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக விளங்கியது நாகேஷ் நடித்த வைத்தி கதாபாத்திரம் ஆகும். கொத்தமங்கலம் சுப்பு இந்த கதையை எழுதும் போது வைத்தி கதாபாத்திரத்தை அவரை நினைத்தே எழுதினாராம்.

மேலும் நாளடைவில் இந்த கதையை யார் படமாக்கினாலும் வைத்தி கதாபாத்திரத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டிருந்தாராம். ஒரு சமயத்தில் இந்த கதையை சேர்ந்து படமாக்கலாம் என எஸ்.எஸ். வாசன் ஏபி. நாகராஜனிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஏபி. நாகராஜனுக்கு துளி கூட ஆசை இல்லையாம் சேர்ந்து தயாரிக்க.

nagesh
nagesh

ஒரு வழியாக கலைமணி கதையின் உரிமையை எஸ்.எஸ். வாசனிடம் 10000 ரூபாய்க்கு வாங்கி படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார். அந்த சமயத்தில் கதையின் ஆசிரியரான கொத்தமங்கலம் சுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அவரையும் பார்த்து தகவலை சொல்லிவிடலாம் என ஏபி. நாகராஜன் மருத்துவமனைக்கு சென்று விவரத்தை சொல்லியிருக்கிறார்.

அவரும் சம்மதம் தெரிவித்ததோடு ஒரு பக்கம் மிகுந்த மன வேதனையில் இருந்திருக்கிறார். ஒன்று யார் படமாக எடுத்தாலும் நாகேஷின் கதாபாத்திரத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடிக்க ஆசைப்பட்டது. அதுவும் நடக்க வில்லை. மற்றொன்று தான் எழுதிய கதையை என்னிடம் சொல்லாமலே மற்றொருவருக்கு எஸ்.எஸ்.வாசன் விற்றது. இந்த இரு காரணங்களால் தில்லானா மோகனாம்பாள் படமாக வெளிவந்தும் கடைசி வரை கொத்தமங்கலம் சுப்பு அந்த படத்தை பார்க்க வில்லை என்று சில தகவல்கள் கூறியது என்று இந்த தகவலை நமக்காக கூறிய சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

nage
subbu

பின்னாளில் வைத்தி கதாபாத்திரத்தில் நாகேஷின் நடிப்பு இந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் இந்த அளவுக்கு ஒரு உயிரோட்டம் பெறுமா என்று சந்தேகம் படும் அளவுக்கு அற்புதமாக நடித்திருந்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.