நாகேஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. அவர் வாழ்க்கையையே பாதிச்சிடுச்சு..

தமிழ் திரையுலகில் ஒரு நகைச்சுவை கலைஞன் என்பதையும் தாண்டி பல வகையான திறமைகளை கொண்டவர் நடிகர் நாகேஷ். நாகேஷின் தனிப்பட்ட திறமை காரணமாக அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். அப்போது இருந்த பெரும் நடிகர்கள் அனைவரோடும் நாகேஷ் நடித்துள்ளார்.
மேலும் நாகேஷ் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த சர்வர் சுந்தரம், சாது மிரண்டால் போன்ற படங்கள் பிரபலமானவை. ஆனால் நாகேஷின் கிண்டலான பேச்சுக்களால் நிறைய தடவை அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அப்போதெல்லாம் சினிமா நட்சத்திரங்கள் அவர்களுக்கு அதிக மரியாதை தர வேண்டும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் சந்திரபாபு, நாகேஷ், எம்.ஆர் ராதா மாதிரியான சில நடிகர்கள் அதில் விதி விலக்காக இருந்தனர். இந்த நிலையில் ஒரு பெரும் நட்சத்திரத்தோடு நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார் நாகேஷ். அப்போது நாகேஷும் கூட பெரும் பிரபலமாகதான் இருந்தார்.
வாய்ப்பை இழந்த நாகேஷ்:
அந்த பெரும் நடிகர் ஒரு வயதான மனிதர் ஆவார். படப்பிடிப்பிற்கு கதாநாயகன் வருவதற்கு தாமதமானது. வெகு நேரமாக காத்திருந்த நாகேஷ் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து என்னய்யா கிழம் இன்னும் வரலை போல என அருகில் இருந்தவரிடம் கூறினார்.
இந்த நேரம் பார்த்து அந்த நடிகர் உள்ளே வந்துவிட்டார். நாகேஷ் சொன்னதை கேட்டு கோபமானவர் நாகேஷை அந்த படத்தை விட்டே தூக்கினார். அதன் பிறகு நாகேஷ் அவரது படங்களில் நடிக்கவே இல்லையாம். பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: உன் வயசு அப்படி!.. ஒழுங்கா நடி!.. படப்பிடிப்பில் ஜெயலலிதாவை திட்டிய எம்.ஜி.ஆர்…