Categories: Cinema History Cinema News latest news

முகத்திற்கு முன்னே புகழ்ந்த ரசிகர்கள்!.. நாகேஷ் சொன்னது இதுதான்!. இப்படி ஒரு மனிதரா?

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் கதாநாயகர்களாக  கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நாகேஷ். அவரின் உடல்மொழி பலரையும் ரசிக்கவைத்தது. இன்றும் பல நகைச்சுவை நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் நாகேஷ்.

Nagesh

இந்த நிலையில் ஒரு பிரபலமான நகைச்சுவை காட்சியில் சிறப்பாக நடித்திருந்ததாக ரசிகர்கள் பலரும் நாகேஷை புகழ்ந்தபோது அந்த பாராட்டுக்களை ஏற்க மறுத்திருக்கிறார். அது மட்டுமல்லாது “அந்த நகைச்சுவை காட்சியில் என்னை விட அவர்தான் நன்றாக நடித்திருக்கிறார்” என்று சக நடிகரை கைக்காட்டியிருக்கிறார். இந்த நிகழ்வை குறித்து இப்போது பார்க்கலாம்.

1964 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ், டிஎஸ் பாலய்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. இப்போதும் இத்திரைப்படத்தை கொண்டாடுபவர்கள் பலர் உண்டு.

Kadhalikka Neramillai

இதில் நாகேஷ், டி எஸ் பாலய்யாவுக்கு பேய் கதை கூறுவது போன்ற ஒரு நகைச்சுவை காட்சி இப்போதும் மிகப் பிரபலமான நகைச்சுவை காட்சியாகும். இந்த காட்சியில் நடித்ததற்காக பலரும் நாகேஷை புகழ்ந்தார்களாம். “இந்த காட்சியில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது” என கூறி பாராட்டினார்களாம். ஆனால் நாகேஷ் அந்த பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லையாம். தன்னை பாராட்டிய அனைவரிடமும், “அந்த காட்சியில் எனது நடிப்பை விட பாலய்யாவின் ரியாக்சன்தான் அந்த காட்சியை ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான காட்சியாக மாற்றியது” என கூறியிருக்கிறார். இந்தளவுக்கு பெருந்தன்மையான மனிதராக நாகேஷ் திகழ்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எம்.எஸ்.விக்கு பிறகு தேவாதான்!.. இப்படி பாராட்டிட்டாரே வாலி!…

Published by
Arun Prasad