எம்.ஆர்.ராதா சொன்ன ஒரு வார்த்தை!.. தலை தெறிக்க ஓடிய நாகேஷ்!.. எல்லாம் துப்பாக்கியால வந்த வினைதான்!..
எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது ஆன எம் ஆர் ராதா நான்கு ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு வெளியே வந்த பிறகு அவருடன் நடிக்க பல பேர் தயங்கினார்கள். அவர் நடத்திக் கொண்டிருந்த நாடகத்தை நடத்த புதிய கதையை எழுதி அதன் பிறகு நாடகத்தை அரங்கேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
அதனால் ஏற்கெனவே நடத்திக் கொண்டிருந்த நாடகமான இரத்தக்கண்ணீர், லட்சுமிக்காந்தன் கொலைவழக்கு போன்ற நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் புதிய நாடகத்தை தொடங்க திட்டமிட்டார் எம்.ஆர். ராதா. அந்த நாடகத்திற்கு தலைமை தாங்க எம்ஜிஆரையும் அழைத்தார் ராதா. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் எம்ஜிஆர் அந்த நாடகத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதன் பின் இருவரும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறுதிச்சடங்கின் போது தான். அப்பொழுதும் கூட சில பேர் எம்ஜிஆரை எச்சரித்தனர். அதாவது எம்.ஆர்.ராதாவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள் என்று எச்சரித்தனர். இப்படி அந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேராமலேயே காலம் அவர்களை பிரித்து பார்த்து வேடிக்கை பார்த்தது.
துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு பக்கம் மன வலியை தந்தாலும் அந்த சம்பவத்தை வைத்து அவ்வப்போது எம்.ஆர். ராதாவே கமெண்ட்களின் வழியாக நகைச்சுவையில் எள்ளி நகையாடினார். அந்த வகையில் இந்த சம்பவத்திற்கு பிறகு மு.க.முத்து நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு படத்தில் ஒப்பந்தமானார் எம்.ஆர்.ராதா.
அந்தப் படத்தில் நடிகர் நாகேஷும் நடித்தார். நாகேஷ் படப்பிடிப்பிற்கு வந்த போது ஒரே கூட்டமாக இருப்பதை கண்டு அங்கு சென்றார். கூட்டத்தை விலக்கி விட்டு பார்த்த போது அங்கு எம்.ஆர்.ராதா அமர்ந்திருந்தார். எம்.ஆர்.ராதா நாகேஷை பார்த்து பக்கத்தில் அமருமாறு கூறினார்.
எம்.ஆர்.ராதா சொன்னதை கேட்டு அவர் பக்கத்தில் அமர அந்தப் படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு போலீஸ் கெட்டப். அதனால் போலீஸ் உடையில் அமர்ந்திருந்தார். அப்போது சிரித்துக் கொண்டே நாகேஷிடம் துப்பாக்கியால் சுடத் தெரியாதவனுக்கு போலீஸ் வேடமாம் என்று சொல்ல,
இதையும் படிங்க : படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்த சிம்ரன்!.. சிவாஜி இருக்கும் போது இப்படி பண்ணலாமா?.. என்ன நடந்தது தெரியுமா?..
அவ்ளோதான் அதை கேட்ட நாகேஷ் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டி அந்த இடத்தை காலிசெய்தார். ஆனால் இதை பற்றி நன்கு அறிந்த எம்.ஆர்.ராதா கொஞ்சம் கூட அதை பற்றி ஒன்றும் நினைக்க வில்லை. இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.