Categories: Cinema News latest news

நக்மாவுக்கு வந்த அந்த ஆசை… இந்த வயசுல இது தேவையா? பொளந்துவிட்ட பிரபலம்

Nagma: நடிகை நக்மாவுக்கு 48 வயது ஆகும் நிலையில் அவருக்கு திடீரென ஒரு ஆசை வந்து இருக்கிறதாம். அதை கேட்ட பலரும் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கமெண்ட் தட்டும் நிலைக்கு வந்து இருக்கிறார். அந்த தகவலையும் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.

1990ம் ஆண்டு சல்மான் கானுக்கு ஜோடியாக இந்தி திரைப்படத்தில் எண்ட்ரி கொடுத்தார் நக்மா. அப்படம் அந்த காலத்தில் அதிகம் வசூலித்த ஏழாவது படமாக அமைந்தது. அதையடுத்து இந்தியில் தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் நக்மாவின் சினிமா கேரியர் உச்சத்தில் இருந்தது.

இதையும் படிங்க: அவர போய் பாத்தான்.. இன்னிக்கு என் மகன் நல்லா இருக்கான்! பிரபல மூத்த நடிகரை நெகிழ வைத்த அஜித்

அவரை அலேக்காக தமிழ் திரையுலகத்துக்கு அழைத்து வந்தனர். பிரபுதேவாவுடன் காதலன், ரஜினிகாந்துடன் பாட்ஷா, சத்யராஜின் வில்லாதி வில்லன் என கிடைத்த எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் அடித்தது. இதனால் நக்மா மிகப்பெரிய நடிகையாக இருந்தார். இதனால் திருமணத்தினை மொத்தமாக தள்ளி வைத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடா, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இருந்தும் ஒரளவுக்கு மேல் அவருக்கு மற்ற மொழிகளில் வாய்ப்பு இல்லாமல் போனது. போஜ்பூரி படங்களில் நடித்து வந்தார். 2008க்கு அவருக்கு அந்த பட வாய்ப்பும் இல்லாமல் போனது. தமிழில் சிட்டிசன் படத்தில் தான் நக்மா கடைசியாக நடித்தார். இப்படி உச்சத்தில் தொடங்கிய நக்மா கேரியர் இன்று அதள பாதாளத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: அப்டேட் இல்லனாலும் பரவால்ல!. இப்படியே போட்டோ போடு தல!.. மாஸ் லுக்கில் அஜித்குமார்..

Published by
Akhilan