பிரபுவுடன் அந்த மாதிரி காட்சிகளை தவிர்த்த நக்மா...! காரணம் அவர் காதலித்த முன்னனி நடிகர்!..யாருன்னு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் சிம்ரன்,ஜோதிகா இவர்களுக்கு முன் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
அதிலும் குறிப்பாக காதலன் படம் சொல்லமுடியாத வெற்றியை அள்ளித்தந்தது. இதனை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நக்மா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்த ஒருவரை காதலித்து வந்தார் என்ற உண்மையை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
அதற்கு சான்றாக ஒரு உண்மையையும் கூறினார் சித்ரா லட்சுமணன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பெரிய தம்பி படத்தில் நடிகர் பிரபுவும் நடிகை நக்மாவும் ஜோடியாக நடித்தனர். அதில் ஒரு காட்சியில் பிரபுவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை புகைப்படங்களாக எடுத்துவிட்டதாக கோவத்தில் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டாராம் நக்மா.
ஏனெனில் அந்த நேரம் தான் அந்த முன்னனி நடிகரை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரபுவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தால் அவரின் காதலுக்கு இடையூறாக இருக்கும் என கருதி படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் போய்விட்டார் என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார். ஆயினும் தொடர்ந்து நக்மாவால் பல பிரச்சினைகள் வந்தது எனவும் கூறினார் சித்ரா லட்சுமணன். அந்த முன்னனி நடிகர் யாரென்று தெரியாவிட்டாலும் அந்த நேரத்தில் சரத்குமாருடன் தான் நக்மாவை சேர்த்து பல வதந்திகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.