எங்களுக்குள்ள அந்த மாதிரி ஆள்களை சேர்த்ததுதான் தப்பு!.. காலம் போன காலத்தில் கண்ணீர் விடும் நளினி..
ரஜினி நடித்த ராணுவவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை நளினி. அந்த படத்தில் நளினி ரஜினிக்கு தங்கையாக நடித்தார். அதன் பின் தொடர்ந்து பல படங்கள் வர முன்னனி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தார்.
ஒரு பக்கம் நடிகர் ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போதே நளினி நடிக்க வந்ததால் அன்றிலிருந்தே ராமராஜனுக்க்கு நளினி மீது தீராத காதல். ஆனால் நளினிக்கு தெரியாமலேயே வைத்திருந்தார். இருந்தாலும் அந்த காதலை அவ்வப்போது தன் அக்கறையின் மூலம் காட்டி வந்திருக்கிறார் ராமராஜன்.
இதையும் படிங்க : காலம் தாண்டியும் பேசப்பட்ட கிளாசிக் திரைப்படத்திற்கு வந்த சோதனை… இவ்வளவு வருஷமாவா இழுத்தடிக்கிறது??
ஒரு பிரச்சினையால் நளினியின் குடும்பத்தாரிடம் ராமராஜன் அடியும் வாங்கியிருக்கிறாராம். அதனால் சென்னையை விட்டு நளினி மலையாளம் பக்கம் சென்று விட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மீண்டும் ஒரு படத்திற்காக சென்னைக்கு வந்தவர் கெட்டுனா இவரை தான் கெட்டுவேன் என்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நன்றாக போய்க் கொண்டிருந்த இவரது திருமண வாழ்க்கையில் ஏதோ சில மனக்கசப்புகள் வர இருவரும் பேசி கடந்த 2000 ஆம் ஆண்டு தான் விவாகரத்து பெற்றிருக்கின்றனர். இதுவரை இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : உண்மையை சொன்னதால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சந்திரபாபுவின் மனைவி… அப்படி என்ன நடந்தது தெரியுமா??
ஆனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தான் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது நளினி பேட்டிகளும் கொடுத்து வருகின்றார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராமராஜனை பற்றி பேசியிருந்தார. அப்போது அவர் கூறியதாவது:
இப்பொழுது தான் இருவரும் வருந்துகிறோம். தேவையில்லாமல் எங்கள் வாழ்க்கைக்குள் தேவையில்லாத சிலரை சேர்த்துக் கொண்டோம். அது தான் நாங்கள் பண்ண மிகப்பெரிய தப்பு. ஆனால் இப்பொழுது காலங்கள் ஓடி போயிடுச்சு. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறும் போதே சற்று கண் கலங்கினார் நளினி.