More
Categories: Cinema History Cinema News latest news

ஜெயலலிதா கேட்டும் மறுத்த நளினி!.. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..

Nalini and jayalalitha: 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நளினி. அப்போது ஹீரோவாக இருந்த விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த 100வது நாள் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

நடிகர் ராமராஜனை காதல் திருமணம் செய்து கொண்டவர் இவர். இவரின் காதலுக்கு குடும்பத்தினர் பெரும் எதிர்ப்பு காட்டியும் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்து, பெற்றோரின் எதிர்ப்புக்கு மீறி ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்த நளினி!.. மகன்தான் காரணமாம்… வினோதமா இருக்கே…

ஆனால், திருமணமாகி சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். அதன்பின், மகன், மகள்களை நளினியே படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தார். ராமராஜன் அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யாகவும் மாறினார்.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் மிகவும் விசுவாசமாக இருந்தார் ராமராஜன். எனவே, அவர் மீது ஜெயலலிதாவுக்கு எப்போதும் ஒரு பாசம் உண்டு. நளினி இப்போது சீரியலிலும், சினிமாவிலும் காமெடி நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த நளினி தன் வாழ்வில் நடந்த பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: நைட் 2 மணிக்கு! அதுவும் சட்டையில்லாமல் – ராமராஜன் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நளினி

நாங்கள் கஷ்டப்பட்ட நேரத்திலெல்லாம் எங்களுக்கு உதவியது ஜெயலலிதா அம்மாதான். அவர்தான் செலவு செய்து என் கணவரை ஜெயிக்கவும் வைத்தார். நான் என் கணவரை பிரிந்தபோதும் கூட என் குழந்தைகள் இருவரையும் அவரின் செலவில் படிக்க வைக்கிறேன் என சொன்னார். ஆனால் ‘கஷ்டம் என்னவென்று என் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும்’ என சொல்லை நான் அதை மறுத்துவிட்டேன்.

என் மகன் திருமணம் நடந்தபோது சம்பந்தி வீட்டினரை வரவழைத்து விருந்து போட்டார். மேலும், ‘தனியாக நின்று யாரின் உதவியும் இல்லாமல் குழந்தைகளை கரை சேர்த்து திருமணமும் செய்து வைத்துள்ளார் நளினி. அவள்தான் கிரேட்’ என அவர்களிடம் பெருமையாக பேசினார்’ என நளினி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: எனக்கு பிடிக்கல! தொடர்ந்து ரஜினியின் 4 படங்களில் நடிக்க மறுத்த நளினி – ஏம்மா அப்படி என்னதான் பிரச்சினை?

 

Published by
சிவா