பொண்ணு கேட்டு செம அடி வாங்கிய ராமராஜன்!.. அதைப்பார்த்து நடிகைக்கு வந்த காதல்!..

மக்கள் நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் ராமராஜன். 90களில் பல ஹிட் படங்களை கொடுத்து ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர். பெரும்பாலும் இவர் கிராமத்து கதைகளில்தான் நடிப்பார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அதிமுக அபிமானி. இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் சில திரையங்களில் ஒரு வருடம் ஓடியது. இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர்.

Karakattakaran Ramarajan, Kanaga
பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர். நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உண்டு. திருமணத்திற்கு பின் ராமராஜனின் மார்க்கெட் இறங்கிவிட்டது. மனைவியை விவாகரத்து செய்தால் நீங்கள் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க முடியும் என ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி நளினியை விவாகரத்து செய்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பல வருடங்கள குடும்பம் இல்லாமலும், சினிமாவில் நடிக்காமலும் தனிமையில் வசித்து வருகிறார். தற்போது சாமானியன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Ramarajan-Nalini
இவர் நடிகை நளினியை ஒரு தலைக்காதல் செய்துள்ளார். அதாவது நளினி கதாநாயகியாக நடிக்கும் போது அந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ராமராஜன். அவரின் காதலை நளினி ஏற்கவில்லை. அவரை பேசி பேசி சம்மதிக்க வைத்தார் ராமராஜன். நளினியின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி ஒரு பேட்டியில் பேசிய நளினி ‘நான் ராமராஜனை காதலிக்கிறேன் என தெரிந்ததும் என் குடும்பத்தினர் என்னை சென்னையிலிருந்து அழைத்து சென்றுவிட்டனர். அதன்பின் மலையாள படங்களில் மட்டும் நடித்தேன். ஒருமுறை ஒரு படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்தேன். அப்போது ராமராஜன் அங்கு வந்து ‘நான் இப்போது ஹீரோவாக நடிக்கவுள்ளேன். இதை உன் வீட்டில் சொல். சம்மதம் சொல்வார்கள்’ என பேசிக் கொண்டிருந்தார்.

Ramarajan, Nalini
அவர் அங்கு வந்த தகவலை யாரோ என் வீட்டில் சொல்லிவிட அவர்கள் அங்கு வந்து அவரை தாக்கினார்கள். நான் அவர் மேல் விழுந்து அதை தடுத்து ‘நான் இவரைத்தான் திருமணம் செய்வேன்’ என அவர்களிடம் சண்டை போட்டேன். இப்படித்தான் அவர் மீது எனக்கு காதல் வந்தது’ என நளினி கூறியிருந்தார்.
குடும்பத்தை எதிர்த்து ராமராஜனுடன் சென்று அவரை திருமணம் செய்து கொண்டார் நளினி. ஆனால், ஜோசியத்தை காரணம் காட்டி அவரையே விவாகரத்து செய்தார் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காமெடியில் பட்டையை கிளப்பிய டாப் நடிகர்கள்!.. வேட்டியை மறந்து பல்பு வாங்கிய ரஜினி..