‘கடைசி விவசாயி’ நல்லாண்டி வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?!.. அட பாவமே!...
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கி வருபவர் மணிகண்டன். இவர் முதலில் இயக்கி வெளிவந்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. அதன்பின் விஜய் சேதுபதியை வைத்து ‘ஆண்டவன் கட்டளை’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
மூன்றவதாக அவர் இயக்கிய திரைப்படம்தான் கடைசி விவசாயி. இந்த படத்தில் நல்லாண்டி என்கிற முதியவர் கதையின் நாயகனாக நடித்தார். இப்படம் முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இயற்கை முறையில் செய்யப்பட்டு வந்த விவசயாம் எப்படி காலப்போக்கில் மாறி செயற்கை ரசாயன உரத்திற்கு மாறியது என காட்டியிருந்தனர்.
இதையும் படிங்க: தேவையில்லாம பிரச்னை வேண்டாம்… அடக்கி வாசிங்க.. விஜய் சொன்ன கண்டிஷன்!
மேலும், இயற்கை விவசாயத்தை பற்றிய பல குறிப்புகளும் இப்படத்தில் சொல்லப்பட்டிருந்தது. அதேபோல், ஒரு விவசாயியை இந்த சட்டம் எப்படி நடத்துகிறது என்பதையும் காட்டியிருந்தனர். இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கொரோனா காலத்திற்கு முன்பே இப்படம் துவங்கப்பட்டது. இடையில் படப்பிடிப்பு தடைபட்டு 4 வருடங்கள் இப்படம் தயாரிப்பில் இருந்தது.
இதன் காரணமாக இந்த படம் வெளியாகும் முன்பே அப்படத்தில் நடித்த நல்லாண்டி இறந்துபோயிருந்தார். சமீபத்தில் 69வது தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது இப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நல்லாண்டிக்கும் சிறப்பு விருது கொடுக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி இந்த படத்தை பார்க்கவும் இல்லை. விருதை வாங்கவும் இல்லை.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்று நல்லாண்டியின் குடும்பத்தாரிடம் பேட்டி எடுத்தது. அப்போது ‘படப்பிடிப்பு இருந்தால் அவருக்கு தினமும் ரூ.500 முதல் 1000 வரை கொடுப்பார்கள். படம் முடிந்த பின் ரூ. 1 லட்சம் கொடுத்தார்கள். இடிந்துபோகும் நிலையில் இருக்கும் எங்கள் வீட்டை புதுப்பித்து கொடுப்பதாகவும் சொன்னார்கள். ஆனால், அதன்பின் அவர்களை பார்க்க முடியவில்லை’ என நல்லாண்டியின் மகள் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு அஜித் படத்துல தான் அத வச்சேன்! வாலி சொன்ன சீக்ரெட்