More
Categories: Cinema History Cinema News latest news

எம்ஜிஆராக ஆபரேஷன்!.. 100 கெட் அப்களில் கலக்கப் போகும் நடிகர்!..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற எம்ஜிஆரின் பாடல் அவரது வாழ்க்கையை பறைசாற்றியது. அவரது கொள்கைகளுக்கு உயிரூட்டியது. அது எம்ஜிஆர் என்ற பிம்பத்தைப் படம் பிடித்துக் காட்டிய பாடல். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தமிழ்த்திரை உலக மன்னாதி மன்னன் யார் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான்.

அந்த வகையில் அவர் பாடலுக்கு ஏற்ப இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய உத்தமர். அவர் நம்மை விட்டு நீங்கினாலும் அவரது நினைவுகள் என்றும் நம்முடனே இருக்கும்.

Advertising
Advertising

அவரது உருவைப் போலவே உள்ள நாமக்கல் எம்ஜிஆர் புரட்சித்தலைரின் படங்களைத் தூசு தட்டி அதில் நடித்து வருகிறார். அந்த வகையில் 3 படங்கள் நடித்துள்ளார். அவரது கடந்து வந்த பாதையைப் பற்றி அவரே சொல்லக் கேட்போம்.

நாமக்கல் எம்ஜிஆரின் இயற்பெயர் சுப்பிரமணி. பிறந்து வளர்ந்தது எல்லாமே நாமக்கல் தான். படிச்சது நாமக்கல். அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி. அதுல புரட்சித்தலைவர் வேடத்துல மாறுவேடம் போட்டு 500 ரூபாய் பரிசுத்தொகை வந்தது. அந்த ஐநூறு ரூபாயைக் கூட 10 ரூபாய் நோட்டா மாத்தி ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்துடுவேன்.

அது புரட்சித்தலைவரோட ஆசி. நான் இப்போ கிட்டத்தட்ட 3000…….4000 மேடை நாடகங்களில் தோன்றியிருக்கேன். 2 திரைப்படங்களும் பண்ணிருக்கேன். நான் இப்போ திரைப்பட நடிகன். சினிமா உலகத்தில் முக்கிய டைரக்டர். சிறந்த டைரக்டர். எனக்கு சொந்த மைத்துனர். அவர் தான் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

Murugadoss

என் மனைவி பெயர் சிவகுமாரி. அவங்க கூட பிறந்த தம்பி தான் முருகதாஸ். எனக்கு திருமணம் ஆனது 1986. அப்போ அவருக்கு ஒரு 14 வயது இருக்கும். அப்பவே அவரு கதை எழுதுவாரு. அவரோட கதைகள் ஆனந்த விகடன் பத்திரிகையில வந்துருக்கு. அப்போ எனது மாமனாரு…வந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக் காமிச்சிருக்காரு. பாருங்க. முருகதாஸ் இந்தவயசுலயே கதை எழுதுறாரு.

பிளஸ் 2 முடிச்சவுடனே முருகதாஸ் என்னை சினிமா துறையில கதாசிரியரா விடுங்கன்னாரு. அப்போ மாமனாரு எங்கிட்ட வந்து சொன்னாரு. முருகதாஸ் வந்து சென்னைக்குப் போகணும்னு ஆசைப்படுறாரு. இந்த வயசுல எப்படி அவரை அனுப்புறது…? நீங்களாவது அவருக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கன்னாரு.

நான் சரி…வாங்கன்னேன். நாமக்கல் வந்தாரு. அவரும் அவங்க அப்பாவும். நான் அவருக்கிட்ட ஒண்ணே ஒண்ணு தான் சொன்னேன். மாப்பிள்ளை…நீங்க சினிமாவுக்குப் போயி கதை எழுதலாம். உங்கக் கிட்ட அத்தனை திறமையும் இருக்கு. உங்கக் கதையிலேயே அது இருக்கு. நான் நேரடியா பார்த்தவன்.

ஒரு டிகிரி படிக்காம நீங்க அங்க போனீங்கன்னு சொன்னா மதிப்பு இருக்காது. நான் பிஏ எக்கனாமிக்ஸ் படிச்சவன். வாழ்க்கையில பல விஷயங்கள் அதில் அடங்கியிருக்கு. அதனால எக்கனாமிக்ஸையே நீங்க எடுத்துப் படிங்கன்னேன். அவரு படிச்சி முடிச்சப் பிறகு நானே அவங்க அப்பாக்கிட்ட சொன்னேன். அவரைக் கூட்டிப் போய் சென்னைல விடுங்க..

சென்னைல மகாலெட்சுமி தியேட்டர் ஓனர் கள்ளக்குறிச்சில இருக்காரு. அவரு கூட்டிட்டுப் போயி கலைமணி கதாசிரியரிடம் கொண்டு போய் சேர்த்தாரு. அவரு ரமணா கதையை முழுக்க என்கிட்ட சொன்னாரு. அவரு அப்பா அப்ப உயிரோட இல்ல. முருகதாஸ்க்கு முதல் படம் 2000ல தீனா வந்தது.

அப்பா 1998லயே காலமாயிட்டாரு. அப்போ தனியார் ஆஸ்பத்திரியில் பணம் பிடுங்குறதைப்பற்றி எங்கிட்ட சொன்னாரு. அப்போ அவர் சொன்னாரு…மச்சான் நான் ஒரு காலத்தில சினிமா டைரக்டராகி பெரிய படம் எடுப்பேன். அப்போ தவறு செய்கிற ஆஸ்பத்திரியோட ஊழலை வெட்ட வெளிச்சமாக்குவேன்னாரு.

சொன்னமாதிரி ரமணால சாதிச்சிக்காட்டிட்டாரு. எனக்கு அது மிகப் பெருமையா இருந்தது.

நீங்க இப்ப கேட்கலாம். அவருக்கிட்ட எம்ஜிஆர் சான்ஸ் கேட்டு நடிச்சிருக்கலாமேன்னு. பட்…எம்ஜிஆர் சப்ஜெக்ட் வேற. அவரோடது வேற. உலகம் முழுக்க இருக்குற எம்ஜிஆர் ரசிகர்கள் என்னை ரசிக்கிறாங்க. நான் புரூஸ்லி மாதிரி. என்னோட படத்தை நான் தான் டைரக்ட் பண்ணுவேன்.

Namakkal MGR1

புரட்சித்தலைவர் சிரிச்சாருன்னா அவ்வளவு அழகா இருக்கும். அவரு பல்வரிசையே அழகு தான். இதை மாதிரி…கீழ் வரிசை கொஞ்சம் உள் வாங்கியிருக்கும். மேல் வரிசை கொஞ்சம் எத்திக்கிட்டு இருக்கும். எம்ஜிஆரு மாதிரி இருக்கணும்னு என் பல்வரிசை, தாடை எல்லாத்தையும் மாற்ற மிகப்பெரிய ஆபரேஷன் செஞ்சிருக்கேன்.

ஆபரேஷன் செஞ்சு நான் முழுசா எம்ஜிஆரா மாறினதுக்கு அப்புறம் தான் என்னை இத்தனை நாடுகள்ல இருந்து கூப்பிட்டாங்க. அமெரிக்கா, சிகாகோ தமிழ்சங்கம், லண்டன், பிரான்ஸ்னு எல்லா நாடுகளுக்கும் போனேன்.

தமிழ்நாடு அளவுல 50 ஆயிரம் சம்பளம் வாங்குறேன். வெளிநாடுகள்ல ஒன்றரை லட்சம், ரெண்டு லட்சம் வாங்குறேன்.

வெளிநாட்டுல நான் வாங்குற பணத்தை அங்க உள்ள பள்ளிகளுக்கே கம்ப்யூட்டர் இந்த மாதிரி அங்க வாங்குற பணத்தை அங்கயே செலவு பண்ணிருவேன். மலேசியா, சிங்கப்பூர்ல மட்டும் தான். ஏன்னா அங்க தமிழர்களுடைய ஏழைப்பள்ளிகள்லாம் இருக்கு. ஐரோப்பிய நாடுகள்ல இல்ல. அதனால அங்கப் போறப்ப அங்க உள்ள பணத்தைக் கொண்டு வந்து இங்க உள்ள பள்ளிகளுக்குக் கொடுத்துருவேன்.

உழைக்கும் கைகள் என்ற இந்தப் படம் உருவாவதற்கு 10 வருஷத்துக்கு முன்னாடியே இதயத்தில் ஒருவன்னு படம் எடுத்துருந்தேன். அது கொஞ்சம் சுமாராத் தான் போச்சு. அப்போ இவ்வளவு விளம்பரம் கொடுக்கல.

முதல் படம் சுமாராப் போனதால கொஞ்சம் பொறுமையா இருந்தேன். தயாரிப்பாளர் குமரகுருபர் போன் பண்ணி நான் உங்களை வச்சிப் படம் எடுக்கப் போறோம். நீங்க நடிச்சிக் கொடுக்கணும்னு சொன்னாரு. என்னுடைய பொறுப்பிலேயே விட்டார்.

Ithayathil oruvan

நான் விவசாயி படத்தை தேவர் பிலிம்ஸ்ல வாங்கி எடுக்கலாம்னு சொன்னேன். விவசாயி படம் சூப்பர் பிளாக் பஸ்டர் மூவி. அது பிளாக் அண்ட் ஒயிட். கலர்ல இல்லையேங்கற வருத்தம் நிறைய பேருக்கு இருக்கு. அதுல கொஞ்சம் மார்டன் பண்ணி இப்ப உள்ள காலக்கட்டத்துக்கு ஏற்ப எடுக்கலாம்னு சொன்னேன்.

40 நாள் சூட்டிங். குற்றாலம் அடிவாரம், புலிமலை பக்கத்துல பண்ணினோம். எல்லாம் சிறப்பா வந்துச்சு. அந்தப்படம் ஓடிட்டு இருக்கு. எம்ஜிஆர் வேஷம் போட கோட் சூட்;; மட்டும் எங்கிட்ட 90 இருக்கு. அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன் படங்கள்ல ஸ்பெஷல் ட்ரஸ் இருக்கும். அதுவும் இருக்கு. இன்னும் அடுத்து நான் எடுக்கப் போற படங்கள்ல வந்து கிட்டத்தட்ட 100 கெட்அப்புல வரப்போறேன்.

மக்கள் திலகம்னு எம்ஜிஆரோட வாழ்க்கையில சில விஷயங்கள நாங்க எடுக்கப்போறோம். அதுல அத்தனை படங்களோட கெட்அப்பையும் 10 செகண்ட் வீதம் எடுக்கப் போறோம். பாடல் காட்சிகள்ல அதைக் கொண்டு வரப்போறோம்.

Published by
sankaran v

Recent Posts