Cinema History
நம்பியார் ஹீரோவா நடிச்சிருக்காரா?? இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!!
தமிழின் பழம்பெரும் வில்லன் நடிகராக திகழ்ந்தவர் எம்.என்.நம்பியார். எம்.ஜி.ஆர். ஹீரோ என்றால் நம் நினைவிற்கு வரும் வில்லன் நம்பியார்தான். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களில் டெரிஃபிக் வில்லனாக நடித்தவர் நம்பியார்.
நம்பியார் வில்லனாக நடித்து வந்த காலகட்டத்தில் நம்பியாரின் வில்லத்தனங்களை பார்த்த பார்வையாளர்கள், இவர் நிஜ வாழ்விலும் இப்படிப்பட்ட கொடுமைக்காரராகத்தான் இருப்பார் என எண்ணினார்களாம். அந்த அளவுக்கு எளிய ரசிகர்களின் மனதில் பயங்கரமான வில்லனாக பதிந்துபோனவர் நம்பியார்.
“எங்க தலைவர் எம்,ஜி.ஆரையே அடிக்கிறியா நீ?” என்று இவரை பல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மிரட்டுவார்களாம். ஆனால் நம்பியார், திரைப்படங்களில் மட்டும்தான் வில்லத்தனம் காட்டுவாரே தவிர, நிஜ வாழ்வில் ஒரு சாந்தமான ஆள் என பலரும் கூறுவார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த எளிய சினிமா ரசிகர்கள் படத்திற்கும் நிஜ வாழ்விற்குமான வேறுபட்டை அறிய முயலவில்லை.
நம்பியார் தமிழில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது ஆங்கிலத்தில் “தி ஜங்கிள்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்த வில்லன் நடிகரான நம்பியார், ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத செய்தி.
1950 ஆம் ஆண்டு வெளியான “திகம்பர சாமியார்” என்ற திரைப்படத்தில் நம்பியார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் சகோதரரான எம்.ஜி.சக்ரபாணி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை “அம்மு” என்று அழைத்த பிரபல இயக்குனர்… கோபத்தில் என்ன பண்ணார் தெரியுமா??
அதே போல் 1952 ஆம் ஆண்டு வெளியான “கல்யாணி” என்ற திரைப்படத்திலும் நம்பியார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திலும் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் 1948 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான “தி ஸ்னேக் பிட்” என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
நம்பியார் ஹீரோவாக நடித்த “திகம்பர சாமியார்”, “கல்யாணி” ஆகிய இரண்டு திரைப்படங்களையும் தயாரித்தவர்கள் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் ஆகும்.