Connect with us
nambi

Cinema News

என்றும் இளமையாக இருக்க ராமராஜனுக்கு நம்பியார் கொடுத்த அட்வைஸ்! இதுதான் காரணமா?

Ramarajan Nambiar: இப்பொழுது சோஷியல் மீடியாவில் எந்த சேனலை ஓப்பன் பண்ணி பார்த்தாலும் அதில் ராமராஜன் பற்றிய செய்தி தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு அவர் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சாமானியன் திரைப்படம் தான் இதற்கு காரணம். அதுவும் 23 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் ராமராஜனும் இளையராஜாவும் ஒன்று சேர்ந்து பணியாற்றி இருக்கின்றனர்.

இளையராஜா ராமராஜன் கூட்டணி என்றாலே அமோக வெற்றி தான். அந்த வெற்றியை இந்த சாமானியன் திரைப்படத்திலும் தொடருமா என்பதை இன்னும் சிறிது நாட்களில் அறிந்து விட முடியும். ராமராஜனுக்கு அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் ஆபத்துகள் இதன் காரணமாகவே அவருடைய தோற்றத்திலும் பேச்சிலும் ஒரு சில மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

இதையும் படிங்க: இங்கிலீஸுக்கு எதிரினா அதுக்காக இப்படியா? சீமான் சூட்டிங்கின் போது பேசும் அந்த ஒரு தமிழ் வார்த்தை

அந்த வகையில் ராமராஜனுக்கே அழகு சேர்ப்பது என்றால் அவருடைய அந்த அரும்பு மீசை தான், ஆனால் இந்த சாமானியன் படத்தில் அவருடைய மீசை கொஞ்சம் தடிமனாக இருக்கும், இதைப்பற்றி சாமானியன் பட இயக்குனர் கூறும் போது ராமராஜனிடம்  ‘இந்த படத்திற்காக மீசையை கொஞ்சம் தடிமனாக வைத்தால் நன்றாக இருக்கும்’ என கூறினாராம்.

ஆனால் ராமராஜன்  ‘இல்லை இல்லை இதை நான் மாற்றவே மாட்டேன். ஏனெனில் நம்பியார் எனக்கு சொன்ன அட்வைஸ் இது. எனக்கும் எம்ஜிஆருக்கும் அழகே இந்த அரும்பு மீசை தான். அதேபோல் நீயும் அரும்பு மீசையை வைத்துக் கொண்டால் எப்போதும் இளமையாக இருப்பாய்’ என கூறினாராம். அதனால் அன்றிலிருந்து இப்போது வரை அந்த அரும்பு மீசையுடன் தான் ராமராஜன் இருந்தாராம். அதனால் நான் இதை மாற்றவே மாட்டேன் என கூறி இருக்கிறார். ஆனால் இயக்குனரின் வற்புறுத்தலின் பேரில் தான் கதைக்காக தடிமன் மீசை இருந்தால் நன்றாக இருக்கும் என சொன்ன பிறகுதான் ராமராஜன் ஒப்புக்கொண்டாராம்.

இதையும் படிங்க: இந்த பள்ளியின் நிறுவனர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவரா? அட சூப்பர் ஹிட் பட நாயகியா இவங்க

google news
Continue Reading

More in Cinema News

To Top