இந்த நாள்களில் மட்டும் நம்பியாரை பார்க்க முடியாதாம்!..சூட்டிங்னா என்ன பண்ணுவாரு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கே பிறந்தவர் போல தன் அசுரத்தனமான வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரளவைத்தவர் பழம்பெரும் நடிகர் நம்பியார். அடிப்படையில் நல்ல குணங்களை வாய்க்கபெற்றவர். எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவர்.
ஆனால் திரையில் தோன்றினால் இவரை பார்த்து பயப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த காலங்களில் இவர் இல்லாத படங்களை காண்பது என்பது அரிது. ஆனால் வருடத்தின் ஏப்ரல் இறுதியில் இருந்து மே இறுதி வரை இவர் சென்னையில் இருக்க மாட்டாராம்.
இதையும் படிங்க : சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் பாடிய டாப் ஹிட் ரஜினிகாந்த் பாடல்… அதுவும் 8 வயசிலங்க…
ஊட்டி போய் விடுவாராம். என்ன சூட்டிங் இருந்தாலும் அந்த மாதங்களில் ஊட்டியில் தான் இருப்பாராம். ஏற்கெனவே கால்ஷீட் இருந்தாலும் ஊட்டிக்கு வந்த எடுக்க சொல்லுவாராம் நம்பியார்.அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
தேவர் ஒரு சமயம் சூட்டிங்கிற்காக நம்பியாரை அணுகிய போது நான் நடிக்க வேண்டும் என்றால் ஊட்டி வா என்று சொல்ல வேறு வழியில்லாமல் நம்பியார் குடும்பத்துக்கே டிக்கெட் ரிசர்வ் செய்து ரூம் போட்டு கொடுத்திருக்கிறார் தேவர். ஊட்டி போனதும் ஒரு பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்த நம்பியார் தேவரிடம் ‘உன் படத்தில் நடிக்க போவது நான், என் மனைவியோ மக்களோ இல்லை’ என்று கூறி அவர் செலவு போக மீதி பணத்தை தேவரிடம் கொடுத்து விட்டாராம் நம்பியார். இந்த சுவாரஸ்ய தகவலை பல நடிகர்களுக்கு நிர்வாகியாக இருந்தவரின் மகனான சுந்தரம் என்பவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.