நான்னா என்ன? சமந்தானா என்ன? பார்ஸியாலிட்டி பார்க்கும் ரசிகர்கள்..! கொதித்தெழுந்த நமீதா...!
தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என பலரும் தங்களின் கவர்ச்சியான ஆட்டங்களினால் ஒட்டு மொத்த ரசிகர்களுக்க் கனவு கன்னியாக திகழ்ந்தார்கள். அதே போல் நடிகை நமீதா ரசிகர்களை மச்சான்ஸ் என செல்லமாக அழைத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
மேலும் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின் தன் கட்டுக்கடங்காத கவர்ச்சியால் சினிமாவையே அசர வைத்தார். ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அஜித் நடித்த வாலி படத்திலும் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மேலும் சரத்குமார், மோகன்லால் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதனிடையில் திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நமீதா ஒரு பேட்டியில் தன் அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது உடன் அவர் கணவரும் இருந்தார்.
நமீதாவிடம் உங்களுக்கு படவாய்ப்புகள் குறைந்ததனால் தான் திருமணம் செய்து கொண்டீர்கள் என செய்தி உலா வருகிறது. அப்படியா? என கேட்க சட்டென உணர்ச்சி வசப்பட்டு ஏன் எல்லாரும் இப்படியே கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் திருமணம் செய்து கொண்ட அதே வருடத்தில் தான் நடிகை சமந்தாவும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த கேள்வி என்னிடம் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி பார்ஸியாலிட்டி பார்ப்பது தான் தவறு. மேலும் திருமணத்திற்கு முன்பு வரை நடித்து கொண்டுதான் இருந்தேன். ஏன் புலி முருகன் படத்தில் கூட நடித்தேன். படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது என தெரிவித்தார்.