
Cinema News
லெஜண்டுக்கு பக்கா பிளான்!… அப்படியே ஆண்டவரை காப்பி அடிக்கும் நம்ம அண்ணாச்சி….
தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த பெரிய திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகிவிட்டன. அடுத்ததாக பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்கள் ரிலீசுக்கு காத்து இருக்கின்றன. இதற்கு இடையில் ஒரு பெரிய திரைப்படம் ரிலீசாக உள்ளது என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்துள்ள ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ளனர். அண்ணாச்சி தான் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஓர் பான் இந்தியா திரைப்படம் போல ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இப்படம் இந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 முதல் 1100 திரைகள் கொண்டிருக்கும் எனவும், வெளிநாட்டில் அதிகப்படியான திரையரங்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கமலின் விக்ரம் படம் வெளிநாட்டு ரிலீஸை காப்பியடித்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்களேன் – திடீரென்று இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த்… காரணத்தை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க…
அதாவது, இவர் தமிழகத்தில் அதிகப்படியான திரையரங்கை பெற்றது போல், விக்ரம் திரைப்படம் வெளிநாட்டில் அதிகப்படியான திரையை பெற்று மிக்பெரிய வெற்றியை பெற்றது. அதன்படி, வெளிநாட்டில் விக்ரம் பெற்ற அதே திரையரங்குகளை பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அண்ணாச்சி நடித்துள்ள ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.