Categories: Cinema News latest news

ஹாலிவுட் நடிகையை அதிர வைத்த நம்ம தனுஷ்.. அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க…

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் தனது அசுர நடிப்பால் அனைவரும் வியப்பில் ஆழ்த்துபவர் நடிகர் தனுஷ். தமிழையும் தாண்டி பல மொழிகளில் இவர் கலக்கி வருகிறார். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பட ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதையும் படியுங்களேன்- மனசு நிம்மதியா வாழனும்… மன்னிச்சி விட்ரனும்.. குக் வித் கோமாளி சுனிதா ‘அதிர்ச்சி’ பதிவு….

இந்த நிலையில், தனுஷ் குறித்து தி க்ரே மேன் படத்தில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் நடிகையான அனாடெர்மாஸ் நேர்கணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் ” தனுஷ் நல்ல நடிகர் மிகவும் கடின உழைப்பாளி. தி க்ரே மேன் படத்தில் அவர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக பயிற்சி ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் தனுஷ் ஒன்று கூட கேட்காமல் தன்னுடைய வேலையை மட்டுமே பார்க்கவேண்டும் என அமைதியாக இருந்தார்.

என் இவ்வளவு நாள் பயிற்சி என ஒரு புகார்  சொல்லவில்லை. பொறுமையாக அந்த சண்டை காட்சியை சரியாக முடித்துக் கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்தார்” என தனுஷ் ஹாலிவுட் நடிகை அனாடெர்மாஸ் வியந்து  தெரிவித்துள்ளார்.

Published by
Manikandan