விஜய் சேதுபதியை ரிஜெக்ட் செய்த கமல்ஹாசன்… இதெல்லாம் ஒரு காரணமா?…

Published on: September 21, 2021
vijay-sethuhi
---Advertisement---
vijay-sethuhi
vijay-sethuhi

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. அலட்டிக்கொள்ளாத தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை கொடுப்பவர். எனவே, மிகவும் அதிகமான திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராக அவர் மாறியுள்ளார்.

vijay-sethupathy
விஜய்சேதுபதி

கடந்த 10 நாட்களில் மட்டும் அவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி என 3 திரைப்படங்கள் வெளியாகியது. ஆனால், அப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

ஒருபக்கம் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். சினிமா, டிவி, ஓடிடிக்கான படங்கள், வெப் சீரியஸ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிப்படங்களில் நடிப்பது என எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார்.

எனவே, கடந்த சில நாட்களாகவே அவரை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்க துவங்கியுள்ளனர். எங்கள் வீட்டு திருமண வீடியோவில் விஜய் சேதுபதியை தேடினேன் என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர்.

vijay-sethu4

ஒருபக்கம், அவரை பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கிய போது அவர் கமல்ஹாசன், கவுதம், கரண், நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த ‘நம்மவர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஆடிஷன் என்பவும் தேர்வில் கலந்து கொண்டார்.

ஆனால், உயரம் குறைவாக இருக்கிறார் என்பதை காரணம் காட்டி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவிலையாம்.

ஆனால், தற்போது அதே கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment