இவ்வளவு கம்மியா!. இது தெரியாம என் சொத்தையே இழந்து இருக்கேன்.. ஷாப்பிங்கில் ஷாக்கான நந்தினி - வைரல் வீடியோ!
இது தெரியாம என் சொத்தையே இழந்து இருக்கேன் என ஷாப்பிங் போன இடத்தில் ஷாக் ஆகி உள்ளார் எதிர்நீச்சல் நந்தினி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல்.இந்த சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளிக் குவித்து வருகிறார்.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக அறிமுகம் ஆகி படிப்படியாக வளர்ந்த இவருக்கு இந்த சீரியல் மூலமாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
தற்போது இவர் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஏற்கனவே பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அவர்களது லிஸ்டில் ஹரிப்பிரியாவும் இணைந்துள்ளார். 500 ரூபாய், 700 ரூபாய் அளவில் பார்த்து அசந்து போய் உள்ளார்.
இது தெரியாம புடவைக்காக என் சொத்தையே இழந்து இருக்கேன் என புலம்பி உள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.