லோகேஷுடன் நிற்கும் அந்த ஃபிகர் யாரு?!.. மண்டையை உடைத்து கொள்ளும் நெட்டிசன்கள்...

by சிவா |
nandini
X

nandini

தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ‘அடடே யார் இவர்?’ என ஆச்சர்யப்படவைத்தார். அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படம் கொடுத்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத திரைக்கதை. வேறுமாதிரியான நடிப்பில் அசத்தியிருந்தார் கார்த்தி.

இப்படங்களுக்கு பின் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். அந்த படமும் மெகா ஹிட் அடித்தது. அதன்பின் கமலை வைத்து லோகேஷ் இயக்கிய திரைப்படம்தான் விக்ரம். கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என பலரும் நடித்த விக்ரம் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

lokesh

lokesh

விக்ரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுக்கு என தனி ரசிகர்களே உருவாகி விட்டனர். அவர் இயக்கும் திரைப்படங்களை லோகேஷின் உலகம் என கூற துவங்கிவிட்டனர். தற்போது மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் விஜயின் 67வது திரைப்படமாகும். இப்படத்தின் டைட்டில் லுக் வீடியோ சில நாட்களுகு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இவரும் காஷ்மீர் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்டார்.

lokesh

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ஒரு பெண்ணுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது. ஒருவேளை இவர் ‘லியோ’ படத்தில் நடிக்கிறாரா என்கிற சந்தேகமும் விஜய் ரசிகர்களுக்கு வந்தது. எனவே, அவர் யார் என தேட துவங்கினார்.

nandini

nandini

உண்மையில் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகி நந்தினி நாகராஜ் என்பது பின்னர் தெரிய வந்தது. லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ‘தானாக உருவான தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு வசனம் எழுதிய கருணாநிதி!.. ஆனால் டைட்டில் கார்டில் பெயர் வராத சோகம்!..

Next Story