ஜாக்கெட்டுக்கு பதிலா இது...நல்ல இருக்கா?...ரசிகர்களை சூடாக்கிய குமுதா....
பா ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் கன்னடத்தில்தான் நடிக்க துவங்கினார். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அப்படத்தில் விஜய் சேதுபதி இவரை குமுதா என அழைத்து கொண்டே இருந்ததால் ரசிகர்களின் மனதிலும் குமுதாவாகவே மாறினார்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேறு மாதிரியான நடிப்பில் அசத்தியிருந்தார்.மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், இடுப்பு தெரிய புடவை கட்டி ஜாக்கெட்டுக்கு பதில் புது விதமான டாப்ஸை அணிந்து போஸ் கொடுத்து ‘எப்படி இருக்கிறது?’ என கேட்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.