தரமான சம்பவம் வெகு விரைவில்.. வெறியில் காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்… கரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

Published on: August 31, 2022
---Advertisement---

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. உண்மையில் சொல்ல போனால் இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் வசூலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த அளவுக்கு வெற்றியை படக்குழுவினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு மென்மையான படமாக இது அமைந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படம் ரிலீசுகாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமே நல்ல வெற்றியை பெற்றது. அப்படி இருக்க செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும்திரைப்படம் என மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது நானே வருவேன். ஆதலால் அந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்களேன்  –  இந்த பொண்ணு மேல கைவைக்க முடியும் அந்தாளு வைக்கிறாரு… கவிஞரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி.!

முதலில் இந்த திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் உடன் வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போது வேறு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை குறிவைத்து உள்ளதாக இணையத்தில் தீயாய் ஒரு தகவல் பரவியது.

இதையும் படியுங்களேன்  –  இவங்களுக்கு வேற வேலையே இல்ல.. உதயநிதியின் தொடர் சம்பவம்.! டிவிட்டரில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்….

ஏற்கனவே தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படமும், கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் தனுஷின் நானே வருவேன் தீபாவளி ரிலீஸ் ஆன ஒருவேளை அறிவிக்கப்பட்டால் உண்மையில் சினிமா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான். தனுஷின் நானே ஒருவன் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.