மறைத்து வைச்ச விஷயத்தை உளறிக்கொட்டிய இளம் ஹீரோ.!? கடுப்பில் தளபதி66 படக்குழு.!

by Manikandan |
மறைத்து வைச்ச விஷயத்தை உளறிக்கொட்டிய இளம் ஹீரோ.!? கடுப்பில் தளபதி66 படக்குழு.!
X

பீஸ்ட் திரைப்படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால், தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக வேண்டும் என்று அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

vijay_main_cine

வழக்கமான தனது ஆக்ஷன் படங்களை தவிர்த்து, இந்த முறை குடும்ப பின்னணி கொண்ட ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார் என்று நெட்டிசன்கள் புலம்பும் வகையில், நமக்கு தெரிந்த பெரும்பாலான நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.

இந்த லிஸ்ட் போதாதென்று, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி இளம் நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்ற செய்தி பரவியது. அதுவும் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான நானி தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது.

படக்குழுவும் அதனை பொறுமையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று இருந்த நிலையில், இதனை நானி ஒரு இண்டர்வியூவில் மறைமுகமாகவே சொல்லியிருப்பார்.

இதையும் படியுங்களேன் - விக்ரம் பார்க்க தியேட்டருக்கு விசிட் அடித்த ஷாலினி அஜித்.! நிருபர் கேட்ட கேள்விக்கு கூலான பதில்.!

அதாவது, அவர் கூறுகையில், அவரது அடுத்தடுத்த நகர்வுகள் பற்றி கேட்கப்பட்டது. அப்போது நானி, அடுத்தது தளபதி விஜய்க்கு ஒரு ரொமான்டிக் குடும்ப திரைப்படம் உருவாகி வருகிறது. அதில் வித்தியாசமாக ஒன்றை தேர்வு செய்து உள்ளேன். எனது பாதை வித்தியாசப்பட்டு இருக்கிறது. என்றவாறு கூறி தனது வில்லன் கதாபாத்திரத்தை அதில் பகிர்ந்து விட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வில்லனாக நானிதான் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறிவருகின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story