தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஐஸ் வைத்த நானி!.. சூர்யாவை விட சூப்பரா பேசுறாரே.. அப்போ ரெட்ரோ?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நானி தற்போது நடித்துள்ள ஹிட் 3 படத்தின் ப்ரோமோஷனுக்காக சில பேட்டிகளை அளித்து வரும் நிலையில் இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நானி தனது தமிழ்நாட்டு ரசிகர்களை பற்றி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
நானி தெலுங்கில் வெளியான அட்டா சம்மா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதையடுத்து இரைடு, சினேகிடு, பீம்லி கபடி சட்டு போன்ற படங்களில் நடித்த அவர் தமிழில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து நான் ஈ, ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். பெரும்பாலும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் நானியின் தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழில் ரிலீஸாகி வருகிறது.
2020ம் ஆண்டில் ஹிட் தி ஃபர்ஸ்ட் கேஸ், 2022ம் ஆண்டில் ஹிட் தி ஷெகேண்ட் கேஸ் படங்கள் வெளியாகியிருந்த நிலையில் வரும் மே1ம் தேதி ஹிட் தி தேர்ட் கேஸ் படமும் வெளியாக உள்ளது. இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால்போஸ்டர் சினிமா தயாரிப்பில் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ஹிட் 3 திரைப்படம். இப்படத்திற்கு மிக்கி ஜே.மேயர் இசையமைத்துள்ளார்.

இன்று சென்னையில் ஹிட் 3 படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துக்கொண்ட நானிக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் தமிழ்நாடு என ப்ரிண்ட் செய்த ஷர்ட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர். அதை பார்த்து நெகிழ்ந்து போன நானி அதை உடுத்திக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
மேலும், அந்நிகழ்ச்சியில் பேசிய நானி தெலுங்கு ரசிகர்கள் என்னுடைய படத்தை பார்த்தால் நல்லா இருக்கோ இல்லையோ என் மேல் இருக்கும் அன்பினால் கொண்டாட தொடங்கிவிடுவார்கள். அதனால் என்னுடைய படத்தின் தரத்தை தமிழ் மற்றும் மலையாள ஆடியன்ஸ்களின் விமர்சன்ம் மூலம் தெரிந்துக்கொள்வேன். ஆனால் இப்போது தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களும் என் மீது வைத்துள்ள அன்பினால் அவர்களும் என்னுடைய படங்களை கொண்டாட தொடங்கிவிட்டனர். அதனால் இப்போது சரியான விமர்சனங்களை எங்கே போய் கேட்பது என்றே தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.