கேப்டன் அமெரிக்காவாக சூர்யா நடிக்கலாம்!.. சிவகார்த்திகேயனுக்கு இந்த ரோல்.. விஜயை மறந்த நானி!..

by Saranya M |   ( Updated:2025-04-24 11:43:52  )
சூர்யா
X

நடிகர் நானியின் புதிய படமான ‘ஹிட்: தி தேர்டு கேஸ்’ (HIT: The Third Case) திரைப்படம் வரும் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படமும் அதே நாளில் வெளியாகவுள்ள நிலையில், பான் இந்தியா அளவில் இருவருக்கும் இடையே போட்டி வெடிக்கும் என்கின்றனர்.

பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு ஹிட் படத்தின் முதல் இரண்டு பாகங்களையும் இயக்கிய அவரே 3வது பாகத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நானி அர்ஜுன் சர்கார் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கேஜிஎஃப், கோப்ரா படங்களுக்குப் பிறகு சான்ஸ் இல்லாமல் இருந்த ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி சிறப்பு தோற்றத்தில் (கௌரவ வேடத்தில்) நடித்துள்ளதாக தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

இதன் முதல் பாகத்தில் விஸ்வக் சென், இரண்டாம் பாகத்தில் அத்வி சேஷ் நடித்திருந்தனர். மூன்றாம் பாகத்தில் நானி லீடு ரோலில் நடித்துள்ளார். 4ம் பாகத்தில் கார்த்தி லீடு ரோலில் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

சமீபத்தில் நானி தயாரித்த கோர்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போக்சோ சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

மே 1ம் தேதி ஹிட் படத்தின் 3ம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், அதனை புரமோட் செய்து வரும் நானி அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களாக யார் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற கேள்விக்கு பிரபாஸை ஹல்க் கதாபாத்திரத்திலும், ராம் சரணை தோர் கதாபாத்திரத்திலும், சிவகார்த்திகேயனை ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்திலும் சூர்யாவை கேப்டன் அமெரிக்காவாகவும் பிளாக் பாந்தராக அல்லு அர்ஜுனையும் ஆன்ட் மேனாக துல்கர் சல்மானையும் நடிக்க வைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களை சூப்பர் ஹீரோக்களாக நடிக்க வைக்கலாம் என நானி கூறிய நிலையில், விஜய்யை சொல்லவில்லையே என அவரது ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். நடிகர் நானி சூர்யாவுடன் மோதினாலும் அவரை கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என சொல்லியிருப்பது சூப்பர் என சூர்யா ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Next Story