1000 கோடி போட்டு படம் எடுத்தாலும் அந்த படம் மாதிரி எடுக்க முடியாது! நானி சொன்ன அந்த படம்

by Rohini |   ( Updated:2025-04-26 04:19:05  )
nani
X

nani

Nani: தெலுங்கில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் நானி. இவருக்கு தமிழ் ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.

அதன் பிறகு சில வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியவர் நானி. முதன் முதலில் அட்டா சம்மா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நானி தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நானி அந்த படத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றாலும் நான் ஈ என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபோனார். அதன் பிறகு ஆஹா கல்யாணம் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இன்னும் அவர் தமிழில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

ரஜினியின் தீவிர ரசிகர் தான் நானி. அவருடைய நடிப்பில் ரஜினியின் சாயலை நாம் பார்க்கலாம். எல்லா படங்களிலும் ரஜினியின் சாயலை வெளிப்படுத்தி தான் நடிப்பார் .ஏன் ரஜினியின் ரசிகனாகவே ஒரு படத்தில் பட முழுக்க நடித்திருப்பார் நானி. தற்போது அவருடைய நடிப்பில் ஹிட் 3 என்ற படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் ப்ரோமோஷன்காக சமீபத்தில் சென்னை வந்திருந்த நானி சென்னையை பற்றியும் தமிழ் சினிமா பற்றியும் அவருடைய அனுபவங்களை பகிர்ந்தார்.

அப்போது மெய்யழகன் திரைப்படத்தைப் பற்றி நானி சொன்னது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆயிரம் கோடி கொடுத்து படம் எடுத்தாலும் மெய்யழகன் படம் மாதிரி யாராலும் எடுக்க முடியாது. அந்த படத்தில் இருந்த உணர்வை திரையில் கடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல என நானி கூறியிருக்கிறார் .

அவர் சொல்வதைப் போல மெய்யழகன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக மிகவும் பாராட்டைப் பெற்ற திரைப்படம் தான் மெய்யழகன். அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி ஆகியோர் நடிப்பில் படம் ரசிகர்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டது. அதில் இருக்கும் எமோஷன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் எமோஷன் ஆகவே பார்க்கப்பட்டது. இந்த படத்தை பார்த்து நானியும் இப்படி சொன்னது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Next Story