Cinema News
Nepoleon: அவரு பேருவச்ச ராசி!… உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகிட்டேன்?!… குருநாதரை புகழ்ந்த நெப்போலியன்…!
இயக்குனர் பாரதிராஜா தனக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்த ராசி தான் தற்போது உலகம் முழுவதும் பேமஸாக இருக்கின்றேன் என்று நெப்போலியன் கூறி இருக்கின்றார்.
நெப்போலியன்: தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரமான பாரதிராஜாவால் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நெப்போலியன். இவரது இயற்பெயர் குமரேசன். தான் நடித்த முதல் திரைப்படத்தில் குமரேசன் என்கின்ற பெயரை மாற்றி பாரதிராஜா தான் அவருக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்தார்.
இதையும் படிங்க: Kavin: பிளடி பெக்கர் தோல்வியால் திடீர் முடிவெடுத்த கவின்… இதுக்கு சும்மா இருக்கலாம்…
படங்கள்: புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய வரவேற்பு பெற்றவர் நெப்போலியன். சினிமாவில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது .
அரசியல்: சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வந்த இவர் திமுக கட்சியின் இணைந்து வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக மாறினார். அதை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக மாறி மத்திய இணை அமைச்சராகவும் இருந்திருக்கின்றார். சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரிய பிரபலமாக இருந்து வந்த நெப்போலியன் தனது மூத்த மகன் தனுசுக்காக இவை அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றார்.
மகன் தனுஷ்: பதவியா? குடும்பமா? என்று வரும் பொழுது குடும்பத்தை தேர்ந்தெடுத்தார் நெப்போலியன். அமெரிக்கா சென்று அங்கு சாஃப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியன் மகனுக்கு சிறுவயதில் இருந்தே தசை சிதைவு நோய் இருந்த காரணத்தால் 10 வயதில் அவர் முழுவதும் நடக்க முடியாமல் போய்விடுவார். 17 வயதுக்கு பிறகு அவர் உயிருடனே இருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
இருப்பினும் அமெரிக்கா சென்று மேல் சிகிச்சை எடுத்து தனுஷை காப்பாற்றினார் நடிகர் நெப்போலியன். ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபராக இருக்கும் நெப்போலியன் தனது மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக ஒரு வருடமாக பெண் தேடி வந்தார். அதை தொடர்ந்து நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இவர்களது திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தமிழ் கலாச்சாரப்படி வெகு விமர்சையாக நடைபெற்ற முடிந்தது.
பெயர் ராசி: இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் கொடுத்த பேட்டியில் தனது பெயர் குறித்த சுவாரசியத்தை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது :’எனக்கு எனது தாய், தந்தையர் வைத்த பெயர் குமரேசன். சினிமாவில் பாரதிராஜா தன்னை அறிமுகப்படுத்தியவுடன் ஆர் என்கின்ற எழுத்தில் தொடங்கும் 20 பெயர்களை எழுதி வருமாறு கூறினார். நானும் எழுதிச் சென்றேன்.
அதில் எந்த பெயரையும் அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவரே யோசித்து நெப்போலியன் என்கின்ற பெயரை தனக்கு வைத்தார். நான் அந்த பெயரை கேட்டவுடன் முதலில் யோசித்தேன். இது என்ன சரக்கு பாட்டில் பெயராக இருக்கின்றது என்று.. ஆனால் அவரிடம் அதைக் கூற முடியாது என்பதற்காக நீங்கள் எது வைத்தாலும் சரி என்று சம்மதித்து விட்டேன்.
இதையும் படிங்க: Archana-Arun: ஹாய் ஹர்லி… அருண் பிறந்தநாள் வாழ்த்தில் உடைந்த ரகசியம்.. அர்ச்சனா எண்ட்ரி இருக்குமோ?
அந்த சமயத்தில் எனது நண்பர்கள் கூட என்னை கிண்டல் செய்தார்கள். எதற்கு நெப்போலியன் என்று வைத்தார், விஸ்கி பிராண்டி என்று வைத்திருக்கலாம் அல்லவா? என்று கிண்டல் செய்தார்கள். அப்போது நான் சொன்னேன் நெப்போலியன் என்ற பெயர் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆனது.
நானும் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பெயர் வைத்திருக்கிறார் என்று விளையாட்டாக சொன்னேன். ஆனால் அவர் பெயர் வைத்த நேரமோ என்னவோ நான் அமெரிக்கா சென்று செட்டிலாகி அதன் பிறகு நான்கு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் ஃபேமஸ்-ஆக தான் இருக்கின்றேன்’ என்று அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.