நீயெல்லாம் எதுக்க நடிக்க வந்த...? ஜீவாவை பாத்து கேட்ட பிரபல நடிகர்..

by Rohini |
jiiva_main_cine
X

2003 ஆம் ஆண்டு ரவி மரியா இயக்கத்தில் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வெளியான படம் ஆசை ஆசையாய். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஜீவா அறிமுகமானார். இதற்கு முன் 1991 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகராக அவர் நடித்த முதல் படம் இந்த படம் தான்.

jiiva1_cine

இவரின் கெரியரில் இவர் நடித்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக ராம், கோ, கற்றது தமிழ், என்றென்றும் புன்னகை, நீ தானே என் பொன் வசந்தம், நண்பன் போன்ற படங்கள் நல்ல வெற்றிபெற்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒரே தமிழ் நடிகர் இவர் தான். குறிப்பாக ராம் திரைப்படத்தில் நடித்ததற்காக.

jiva2_cine

இந்த படத்தில் இவருக்கு மாமனாராக நடிகர் நாசர் நடித்திருப்பார். படஷூட் போய் கொண்டிருந்ததாம்.அப்பொழுது நடிகர் நாசர் அவர்கள் ஜீவாவை பார்த்து நீ பெரிய புரொடியூசர் மகனா நடிக்க வந்துருவியா? நீ எதுக்கு நடிக்க வந்த அப்படினு கேட்டாராம்.

jiiva3_cine

இதை ஜீவாவும் நாசரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் ஜீவாவே கூறியுள்ளார். அருகில் நாசர் அவர்களும் இருக்கிறார். சொல்லி முடித்ததும் இருந்தாலும் நாசர் தான் என் குரு என மாத்தி போட்டு விட்டார்.

Next Story