நீ எல்லாம் எதுக்க நடிக்க வர...? நாசர் கேட்ட கேள்விக்கு அந்த படத்தின் மூலம் பதிலடி கொடுத்த பிரபல நடிகர்...!

by Rohini |
nasar_main_cine
X

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் நாசர். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் னது வில்லத்தனமான கதாபாத்திரங்களால் மக்களை பீதியடைய வைத்தவர்.

nasar1_cine

இன்று அதே மக்கள் இது போன்ற அப்பா நமக்கில்லையே, இது போன்ற தாத்தா நமக்கில்லையே என்று சொல்லுமளவிற்கு குணச்சித்திர வேடங்களில் பட்டையை கிளப்பி வருகிறார்.

nasar2_cine

அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன். இவரின் நடித்த முதல் படத்திலயே மக்களின் அபிமானங்களை பெற்றார். முதன் முதலில் நடிக்க போகும் போது நடிகர் நாசரிடம் தான் ஆசிர்வாதம் வாங்க போனாராம்.

nasar3_cine

ஆனால் நாசரோ நீ தயாரிப்பாளரின் மகனா இருக்கிறதனால நடிக்க வந்துருவியா? என்று கேட்டு ஏளனமாக பேசினாராம். ஆனால் அவர் நடித்து வெளியான 83 படத்தை பார்த்து கண்கலங்கினாராம் நாசர். 83 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வெற்றியும் பெற்ற படமாகும். ஒரு தரம் வாய்ந்த இந்திய அளவில் நட்சத்திரமாக ஜொலிக்க கூடிய ஜீவாவை அன்றைக்கு அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது என நினைத்து கண்கலங்கினாராம்.

Next Story