Ajith: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த பத்தாம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. படத்தில் எந்த ஒரு லாஜிக் இல்லை என்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பட முழுக்க மாஸ் காட்சிகளை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்தாகவே பார்க்கப்படுகிறது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். சீட்டின் நுனியில் உட்கார்ந்து தான் படத்தையே பார்க்கின்றனர். அந்த அளவுக்கு படத்தில் எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் பிரேமுக்கு பிரேம் அஜித்தை மிகவும் மாசாக காட்டி இருக்கிறார் ஆதிக்.
இந்த நிலையில் படத்தில் அஜித்துக்கு மகனாக நடித்தவர் கார்த்திகேயா. முதலில் அந்த கேரக்டரில் வேறொரு நடிகர் தான் நடிக்க இருந்ததாம். அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது குட் பேட் அக்லி படத்தில் தான் நடிக்காமல் போனதன் காரணத்தை கூறியிருக்கிறார். அஜித்துக்கு மகனாக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் பிரபல மலையாள நடிகர் நஸ்லன். இந்த படத்தில் நான் அஜித்துக்கு மகனாக நடிக்க வேண்டும் என ஆதிக் என்னிடம் கூறிய போது ஆழப்புழா ஜிம்கானா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் என் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய வாய்ப்பு. அந்தப் படத்தில் எனக்கான காட்சிகள் அதிகமாக இருந்ததினால் அந்த படத்திற்காக நான் அதிக கால்சீட்டுகளை ஒதுக்க வேண்டி இருக்கும். அப்படி நான் அதில் கமிட் ஆகி இருந்தால் ஆழப்புழா ஜிம்கானா படத்தில் என்னால் நடிக்க முடியாது. இதன் காரணமாகவே தான் குட் பேட் அக்லி படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என ஒரு பேட்டியில் கூறுகிறார்.

இருந்தாலும் கார்த்திகேயா அஜித்தின் மகனாக அற்புதமான நடிப்பை வழங்கி இருப்பார். இவர் கேஜிஎப், எம்புரான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், சிம்ரன், யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி ,பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில் என அவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தனர். படம் வெளியாகி இன்று வரை 145 கோடி வசூலித்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இனிவரும் நாட்களில் இன்னும் இதனுடைய வசூல் அதிகமாகும் என்று தெரிகிறது.