முதல் படத்தில் ஆஹா ஓஹோ ஹிட்.! அடுத்தடுத்து காணாமல் போன இளம் சிட்டுகள்… நஸ்ரியா முதல் ஸ்ரீதிவ்யா வரை…

Published on: September 2, 2022
---Advertisement---

ஒரு சில ஹீரோயின்கள் சினிமாவில் கஷ்டப்பட்டு நடித்து தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து ரசிகர்களை  கவர்ந்தனர். சிலர் அப்படி இல்லை. ஒரு படத்திலேயே தங்களது குறும்புத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவிடுவர். ஆனால் சில வருடங்களில் காணாமல் போய்விடுவர். அப்படிப்பட்ட ஹீரோயினாக்களை இப்பொது பார்க்கலாம்.

நஸ்ரியா – இவர் தமிழ் திரைப்படத்தின் அறிமுகமாவதற்கு முன்னாடியே, பிரபலமாகிவிட்டார். நேரம் எனும் தமிழ்-  மலையாளம் படத்தில் மூலம் அறிமுகம் ஆன நஸ்ரியாவை கவனிக்க வைத்தது என்றால், அதன் பிறகு ராஜா ராணி திரைப்படத்தில் அதிக ரசிகர்களை பெற்றுவிட்டார். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே, ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அண்மையில் அடடே சுந்தரா திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துட்டார்.

ஸ்ரீதிவ்யா – வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, அடுத்தடுத்து குடும்ப பங்கான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சிறு சிறு படங்களில் நடித்து வருகிறார். இருந்தும் இவருக்கென தனி ரசிகர்கள் தற்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கயல் ஆனந்தி – கயல் எனும் முதல் திரைப்படத்திலேயே தனது வெள்ளந்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். அதன் பிறகு ஒரு சில படங்கள் நடித்தாலும் அது அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. கடைசியாக பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கவனிக்க வைத்தவர். சில மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் எந்த படத்திலும் நடித்ததாக தெரியவில்லை.

இதையும் படியுங்களேன்  –  அந்தமாதிரி நடந்தாலும் எனக்கு பரவாயில்லை… மெட்ராஸ் நாயகியின் அதிரடி பதில்..!

 

லட்சுமி மேனன் – ஆரம்பமே இவருக்கு கும்கி, சுந்தரபாண்டியன் எனும் இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தது. அப்போதே அதிகமான ரசிகர்களை பெற்றிருந்தார். அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் அமையாததாலும்,  கதையினை தேர்வு செய்யாத காரணத்தால் அடுத்தடுத்து படங்களின் தோல்வியாகியது. அஜித்தின் வேதாளம் படத்தில் கவனிக்க வைத்தவர் அதன் பிறகு காணாமல் போனார். கடைசியாக புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்களேன்  –  பெண் உதவி இயக்குனரை படுக்கைக்கு அழைத்த காமெடி பிரபலம்.. படக்குழு செஞ்ச கேவலமான செயல்.!

ரேஷ்மி மேனன் – முதல் படமான இனிது இனிது திரைப்படத்திலேயே கல்லூரி இளைஞர்கள் மத்தியில் அதிகமாக கவனிக்க வைத்தவர். அதன் பிறகு ஒரு சில சிறிய பட்ஜெட் படத்தில் நடித்து கொஞ்சம் அதிக ரசிகர்களை கவர்ந்த போதே, பாபி சிம்ஹாவை காதல் திருமணம் செய்து குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.