“ரஜினியை அடிக்க நான் ரெடி…” தயங்கிய நடிகர்களிடையே ஆவலோடு கை தூக்கிய நாசர்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நாசர். வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வரும் நாசர், தமிழின் டாப் நடிகர்களோடு இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “குருதிப்புனல்”, “தேவர் மகன்” ஆகிய திரைப்படங்கள் நாசரின் சினிமா கேரியரில் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.
“அவதாரம்”, “தேவதை”, “மாயன்”, “”பாப் கார்ன்”, போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் நாசர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்த நாசர், ஆங்கிலத்திலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் நாசர், ஒரு முறை ரஜினியை அடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படத்தில் இவர்களுடன் வடிவேலு, நாசர், விஜயகுமார், மாளவிகா ஆகிய பலரும் நடித்திருந்தனர்.
இதில் ரஜினியை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சியை உருவாக்கும்போது இயக்குனர் பி.வாசு, பிரபுவிடம் ரஜினியை அடித்து விட்டை விட்டு வெளியே அனுப்புவது போல் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பிரபு “நான் எப்படி ரஜினியை அடிக்கமுடியும்? நாளைக்கு படம் வெளியானதுக்கு பிறகு என்னால் வீட்டை விட்டு வெளியவே வர முடியாது” என கூறி மறுத்துவிட்டாராம்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி குரலுக்கு பின்னணி கொடுத்த யேசுதாஸ்… இப்படியெல்லாம் நடந்துருக்கா??
அதன் பின் பி.வாசு, விஜயகுமாரிடம் இந்த காட்சியில் நடிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமாரும் நடிக்க மறுத்துள்ளார். இவ்வாறு நிலைமை போய்க்கொண்டிருக்க இயக்குனர் வாசுவுக்கு பின்னால் இருந்து “சார், நான் நடிக்கிறேன் சார்” என நாசர் கைத்தூக்கினாராம். பி.வாசு உடனே சரி என்று தலையாட்டிவிட்டாராம். அதன் பின்தான் இந்த காட்சி படமாக்கப்பட்டதாம்.
இது குறித்து நாசர் அப்பேட்டியில் கூறியபோது “எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்துஆசான் என்னிடம் கூறியது ஒன்றே ஒன்றுதான். தன்னுடன் நடிப்பவர்கள் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவர்களை சக நடிகனாக பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் நாம் அவர்களுக்கு ரசிகராக இருக்கலாம். ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் சக நடிகர்களே” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.