Categories: Cinema News latest news

விபத்தில் சிக்கிய நாசர்.! தற்போதைய நிலைமை என்ன.? மனைவி கொடுத்த விளக்கம்.!

தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து கலக்க கூடிய ஒரு நடிகர் என்றால் அது நாசர் என்று கூறலாம். நேற்று நாசருக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர், தற்போது தெலுங்கானா போலீஸ் அகாடமியில் புதிய தெலுங்கு படமான ‘ஸ்பார்க்’  படத்தில் நடித்து வருகிறார். நாசருடன் நடிகைகள் சுஹாசினி, மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் நடிகர் சியாஜி ஷிண்டே ஆகியோர் கலந்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நாசருக்கு விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, நாசரின் மனைவி கமீலா நாசர் குறித்து பேசுகையில், தற்போது நாசர் நலமுடன் இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- திருச்சிற்றம்பலம் – தனுஷ் அடித்து ஆடும் இடம்.! ஜெயித்தாரா தோற்றாரா.?! விமர்சனம் இதோ…

மேலும் அவர் விரிவாக கூறுகையில், படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு பெரிய கல் தட்டி எதிர்பாரத விதமாக கீழே விழுந்ததால், கை, கால் மற்றும் கண்ணுக்கு அருகே சிறிய காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவமனையில் ஒரு ஊசி மட்டும் போட்டு  வீட்டுக்கு போகலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில், நாசர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றெல்லாம் வதந்திகள்  பரவியது. அது எனக்கு மிகவும் வேதனை அளித்தது என்று வருத்துத்தடன் தெரிவித்தார். மேலும் இன்று அல்லது நாளை படப்பிடிப்புக்கு மீண்டும் இணைய இருப்பதாக உறுதியளித்தார்.

Published by
Manikandan