மணிரத்னத்தின் ஹிட் படத்தில் நடிக்க இருந்த நதியா… ஜஸ்ட்டு மிஸ்சு..! என்ன படம் தெரியுமா?

by Akhilan |
மணிரத்னத்தின் ஹிட் படத்தில் நடிக்க இருந்த நதியா… ஜஸ்ட்டு மிஸ்சு..! என்ன படம் தெரியுமா?
X

Maniratnam: தமிழ் சினிமாவில் என்றும் இளமை நாயகி என்றால் அது நதியா தான். அம்மா வேடத்தில் நடித்தால் கூட யூத் பீல் கொடுக்கும் அவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஒரு ஹிட் படத்தினை மிஸ் செய்து இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கன்னட திரைப்படமான பல்லவி அனுபல்லவி மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் மணிரத்னம். அவரது அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால், அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது. இருந்தும் ஒரு சில படங்களில் பணிபுரிந்து வந்தார்.

இதையும் படிங்க: குட்டிக்கதையை விட இமேஜ் தான் முக்கியம்… கோபம் குறையாத மனைவி சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டம் தான்!

தமிழில் மௌன ராகம் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக கோலிவுட்டில் அமைந்தது. அது அவருக்கு பிலிம்பேர் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை வாங்கி கொடுத்தது. தொடர்ச்சியாக, அவர் இயக்கத்தில் உருவான நாயகன் மற்றும் அஞ்சலி ஆகிய இரண்டு படங்களுமே அகாடமி விருதுக்கு தகுதி பெற்றது.

தளபதி, ரோஜா, பம்பாய், தில் சே..,மௌன ராகம், அலைபாயுதே, ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் இன்னும் கோலிவுட்டில் தனி இடத்தினை தக்க வைத்து இருக்கிறது. இந்நிலையில் மணிரத்னத்தின் முதல் வெற்றி படமான மௌன ராகம் படத்தின் ரேவதி கதாபாத்திரத்தில் முதலில் நதியாவை தான் கேட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: வாய்ப்புக்காக ஏங்கிய விக்ரமா இப்டி? அம்மாவுடன் சென்று தயாரிப்பாளரிடம் சண்டை போட்ட சம்பவம்!..

ஆனால் அந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு கால்ஷூட் தர விருப்பம் இல்லை என நோ சொல்லிவிட்டார். அதை தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸுக்கான வாய்ப்பும் மணிரத்னத்திடம் இருந்து நதியாவுக்கு கிடைத்தது அதற்கு சில காரணங்களால் நோ சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story