வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்...

by ராம் சுதன் |   ( Updated:2024-05-30 14:10:18  )
Uyarntha manithan
X

Uyarntha manithan

இப்போது கோடி கோடியாக செலவு செய்து பாடலை எடுக்கிறார்கள். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. படம் தோல்வியைத் தழுவி விடுகிறது. ஆனால் அந்தக் காலத்தில் வெறும் 750 ரூபாய் பட்ஜெட்டுக்குள் பாடலை ரெக்கார்டிங் பண்ணி விடுவார்களாம். படமும் சூப்பர் ஹிட் அடித்து விடும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தமிழ்ப்பாட்டுக்கு தேசிய விருது கிடைத்தது பற்றியும் ஏவிஎம் நிறுவன அதிபர்களுள் ஒருவரான AVM குமரன் இப்படி சொல்கிறார்.

ஒரு பாட்டுக்கு பட்ஜெட் போடுவாங்க. வெறும் 750 ரூபா தான் செலவு. அதுக்குள்ள பாட்டை ரெக்கார்ட் பண்ணி முடிச்சிரணும். ஆனா இப்போ உள்ள பின்னணி இசை தான் முன்னணி இசையா மாறிடுச்சு. மிக்சிங் சரியில்ல. டயலாக் பேசுறது எதுவுமே புரிய மாட்டேங்குது.

Uyarntha Manithan

Uyarntha Manithan

உயர்ந்த மனிதன் படத்துல 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா' என்ற பாடலை ரெக்கார்டு பண்ணிட்டோம். படம் அடுத்த வாரம் ரிலீஸாகற சூழ்நிலை. இன்னைக்கு சிவாஜி, வாணிஸ்ரீ, கேமரா மேன் என எல்லாரும் கொடைக்கானலுக்குப் போயிட்டாங்க. அங்கே பயங்கரமான மழை கொட்டித் தீர்க்குது.

அங்கு தான் இந்தப் பாட்டுக்கான காட்சியை எடுக்கணும். சிவாஜி ஹீரோயினைத் தேடுறாரு. அவங்க மறைஞ்சி மறைஞ்சிப் போறாங்க. இந்த மாதிரியான அமைப்பு. பாட்டை ரெக்கார்டு பண்ணியாச்சி. ரொம்ப அருமையா வந்துருக்கு. ஆனால் அங்கு சூட்டிங் எடுக்க முடியாத அளவுக்கு நல்ல மழை.

இந்த மாதிரியான நேரத்துல என்ன பண்றதுன்னு பஞ்சு சார் அங்கிருந்து பிளைட்ல மெட்ராஸ்சுக்கு வந்துட்டார். அப்பாக்கிட்ட சொல்றாரு. 'சார் எடுக்கவே முடியாது. அங்க நல்ல மழை. கண்டிப்பா இந்த ஒரு வாரத்துக்குள்ள எடுக்க முடியாது. நீங்களும் ஒரு வாரத்துக்குள்ள ரிலீஸ வச்சிட்டீங்க. ஒண்ணு ரிலீஸைத் தள்ளிப் போடுங்க. இல்லன்னா பாட்டை வெட்டிருங்க'ன்னு சொல்றாரு.

நானும், எம்எஸ்.வி.யும் எங்க அப்பாக்கிட்ட நேரா ரூமுக்குப் போனோம். 'பாட்டு வேணுமா, இல்லன்னா படம் ரிலீஸாகணுமா?'ன்னு கேட்குறேன். 'படத்தைத் தள்ளிப் போட முடியாது. அதனால பாட்டை அவரு சொல்ற மாதிரி எடுத்துருவோம்'னு அப்பா சொல்லிட்டாரு. நானும், எம்எஸ்வியும் 'இந்தப் பாட்டு அருமையா இருக்கு. இதை வேணான்னு சொன்னா நான் ஒத்துக்கவே மாட்டேன்'னு போராடினோம்.

இதையும் படிங்க... அந்த விஷயத்துல சத்யராஜை பார்த்து கொஞ்சம் நடிக்கக் கத்துக்கோங்க… வெளுத்து வாங்கிய பிரபலம்

உடனே டைரக்டரை வரச் சொன்னாரு. 'இவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றாங்க. இதுக்கு ஏதாவது வழி பண்ணுங்க'ன்னு அப்பா சொன்னாரு. உடனே கொடைக்கானல்ல எடுத்த மாதிரி ரெண்டே நாள்ல செட் போட்டு பாடலை எடுத்தோம். இந்தப் பாட்டுக்கு இந்தியாவிலேயே முதல் முறையா அதுவும் ஒரு தமிழ்ப்பாட்டுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. இந்தப் பாட்டு படத்துல வரலன்னா பெரிய சாதனையே மிஸ் ஆகியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story