சர்ச்சையில் சிக்கிய சூர்யா.! சிபாரிசு மூலம் கிடைத்ததா தேசிய விருது.? திடுக்கிடும் ஆதாரம் இதோ...

by Manikandan |
சர்ச்சையில் சிக்கிய சூர்யா.! சிபாரிசு மூலம் கிடைத்ததா தேசிய விருது.? திடுக்கிடும் ஆதாரம் இதோ...
X

அண்மையில் இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு மத்திய அரசு தேசிய விருதுகளை அறிவித்தது. இதில் இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருது , சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யா மற்றும் பாலிவுட் ஹீரோ அஜய் தேவகன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை என மொத்தமாக ஐந்து விருதுகள் அறிவிக்கப்பட்டது.

ஒரு தமிழ் திரைப்படம் இந்திய அளவில் உயரிய விருதுகளை பெற்றுள்ளது தமிழ் திரையுலகை ஆச்சரியப்படுத்தியது. மேலும் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல் சர்ச்சைகளும் எழுந்ததுள்ளது.

இதையும் படியுங்களேன் - அடுத்த பார்த்திபன்.. நஷ்ரியா புருஷன் தான்… புது படத்திற்காக என்ன செய்ய போறார் பாருங்க…

அதாவது, தேசிய விருது கமிட்டியில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை என்பவர் அந்த கமிட்டியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாகத்தான் அவரின் சிபாரிசு பெயரில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு இத்தனை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவர் விருதை தேர்ந்தெடுக்கவில்லை. சூர்யா படத்தையும் அவர் சிபாரிசு செய்துள்ளார் என்று தான் தகவல் வெளியாகி வருகிறது. இது உண்மையா அல்லது யாரேனும் சர்ச்சையை கிளப்ப வதந்திகளை பரப்ப விட்டுள்ளனரா என்பது தெளிவாக தெரியவில்லை.

Next Story