பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. யார் அந்த வீரர்... ருசிகர தகவல்...
பயோபிக் மோகம் அதிகரித்துள்ள இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த படத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
டிவியில் தொகுப்பாளராக மிகப்பெரிய ரீச் கிடைத்தவர் சிவகார்த்திகேயன். இதை தொடர்ந்து மெரினா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் அவரை நடிகனாக ரசிகர்கள் அங்கீகரித்தனர். தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்தன. இன்று சினிமாவில் ஒரு முன்னணி அந்தஸ்த்தை பிடித்து விட்டார்.
சிவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ப்ரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியானது. இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சூரி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தை அடுத்து மாவீரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் நட்ராஜன் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறதாம். அதற்கு நடராஜனும் ஓகே சொல்லி இருக்கிறார். திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் நடராஜாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற முக்கிய தகவலும் வெளியாகி இருக்கிறது.