‘நாட்டாமை’ படத்தில் அந்த சீனை பார்த்தாலே உறுத்தலா இருக்கும்!.. பிரபல நடிகர் ஓபன் டாக்..
சரத்குமார் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் நாட்டாமை. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். படம் வெளியாகி 100 நாள்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது. அதுமட்டுமில்லாமல் இன்று எப்பொழுது டிவியில் பார்த்தாலும் ஓடி போய் மக்கள் பார்க்கிற படமாகவும் நாட்டாமை விளங்குகிறது.
இந்தப் படத்தில் சரத்குமாருடன் நடிகை மீனா, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, பொன்னம்பலம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தாலும் கொட்டாப்பாக்கு பாடல் இன்றளவு வரை மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நாட்டாமை படத்தில் ஒரு காட்சியை எப்பொழுது பார்த்தாலும் உறுத்தலாகவே இருக்கிறது என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார். அதை கேட்ட கே.எஸ்.ரவிக்குமார் ‘உறுத்தலா? அப்படி என்ன சீன்?’ எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘மீனா சரத்குமாரிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வார். அந்த சமயம் மீனாவின் தந்தையான வினுசக்கரவர்த்தி மகளை பார்க்க வீட்டிற்கு வருவார். வந்தவர் நேராக சரத்குமாரை பார்த்ததும் காலில் விழுவார். இதை பார்த்த மீனாவுக்கு பயங்கர ஷாக்’ இந்த சீனை பார்க்கும் போது தான் சித்ரா லட்சுமணனுக்கு உறுத்தலாக இருந்ததாம்.
ஏனெனில் திருமணத்திற்கு பிறகு தான் மீனா சரத்குமார் வீட்டிற்குள் வந்திருக்கிறார். ஆனால் திருமணத்தின் போது சரத்குமாரை வினுசக்கரவர்த்தி விழுந்து கும்பிட்டிருப்பாருல, அதை மீனாவும் பார்த்திருப்பாரு. ஆனால் அதையெல்லாம் படத்தில் காட்சிகளாக காட்டியிருக்க மாட்டீர்கள்,
இதையும் படிங்க : யார வேணுனாலும் லவ் பண்ண ஜெமினிதான் கரெக்ட்!.. நமக்கு செட் ஆகாது.. சிவாஜி நடிக்காமல் விலகிய படம்..
இருந்தாலும் ரியலாக யோசித்து பார்த்தால் ஏற்கெனவே அந்த நிகழ்வை பார்த்திருக்கும் மீனா வீட்டில் தன்னை பார்க்க வரும் தந்தை சரத்குமாரின் காலில் விழுவதை பார்க்கும் போது அவ்ளோ ஷாக் தேவையில்லை, இதை பார்க்கும் போது தான் எனக்கு உறுத்தலாக இருக்கிறது என சித்ரா லட்சுமணன் கூறினார்.