பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் சினிமா கற்றுகொண்டவர் இவர். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியை தனது பூர்வீகமாகக் கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்தில் சந்தித்த பிரச்சினைகளை தனது திரைப்படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார் மாரி செல்வராஜ். எனவே இவரை சாதிய இயக்குனர் என ஒரு கூட்டம் சொல்கிறது. இவரோ ‘நான் சாதியை எதிர்த்து படம் எடுக்கிறேன்’ என தொடர்ந்து சொல்லி வருகிறார்.
பரியேறும் பெருமாள் படத்திற்குப் பின் மாமன்னன், கர்ணன், வாழை, பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த, சந்திக்கும் பிரச்சினைகளை தொடர்ந்து எனது படங்களில் பேசுவேன் என சொல்லி வருகிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில், கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நட்டி நடராஜ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார்..
கர்ணன் படத்தில் ஒரு காட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை நான் காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் தடியால் அடிப்பது போல ஒரு காட்சி வரும். ‘உண்மையா அடிச்சா அவங்களுக்கு வலிக்குமே.. வேற மாதிரி பண்ணலாமா?’ என்று நான் மாரி செல்வராஜிடம் கேட்டேன். இது ‘டம்மி ஸ்டிக்தான் சார்.. அடிச்சா வலிக்காது’ என்று சொல்லி அவரின் உதவி இயக்குனர் ஒருவரை கூப்பிட்டு அவரை அடி அடியென அடித்து வலிக்குதான்னு கேட்டார்.. அவர் வலிக்கலன்னு சொன்னார்..
மாரி அந்த பக்கம் போனதும் அவர் அடித்த இடத்தில் தேச்சிக்கிட்டார். நான் அவர்கிட்ட ‘வலிச்சா சொல்ல வேண்டியதுதானே’ ன்னு கேட்டதற்கு ‘என்ன சார் பண்றது ஒன்னு ரெண்டு அடி மேல படத்தான் செய்யும்’ என்றார். ஷாட்ல நடிக்கும் போது அடிக்கிற மாதிரி கையை ஓங்கிட்ட கையை பின்னாடி இழுத்துட்டேன். அதை மரி செல்வராஜ் ஓகேன்னு சொல்லிட்டார்’ என சொல்லியிருக்கிறார்..
